Mar 18, 2018 07:58 AM

ஹைடெக் டைக்னோஸ்டிக் செண்டரின் புதிய கிளை சென்னை ஐய்யப்பன்தாங்கலில் திறப்பு!

e1bf2be18a4a2c925d51ed4f0fbc05d4.jpg

சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் இயங்கி வரும் முன்னணி பரிசோதனை மையமான ஹைடெக் டைக்னோஸ்டிக் செண்டரின் (HITECH DIAGNOSTIC CENTRE) 60 வது கிளை சென்னை ஐய்யப்பன் தாங்களில் திறக்கப்பட்டுள்ளது.

 

இன்று காலை நடைபெற்ற திறப்பு விழாவில், ஹைடெக் டைக்னோஸ்டிக் செண்டரின் மருத்துவ இயக்குநர் மற்றும் சி.இ.ஒ டாக்டர்.எஸ்.பி.கணேசன் கலந்துக் கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஹைடெக் டைக்னோஸ்டிக் செண்டரின் நிர்வாகிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டார்கள்.

 

செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர்.எஸ்.பி.கணேசன், “ஹைடெக் டைக்னோஸ்டிக் செண்டரின் புதிய கிளையை சென்னை, ஐய்யப்பன் தாங்கலில் திறந்திருக்கிறோம். இது எங்களது 60 வது கிளையாகும். எங்களிடம் தினமும் 4000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன் அடைந்து வருகிறார்கள். அவர்களுக்கான ரத்த பரிசோதனை, ஸ்கேன் போன்ற சேவைகளை செய்து வருகிறோம். குறைவான கட்டணம் என்பதை விட தரமான சேவையை நாங்கள் செய்து வருவதால் தான் தமிழகத்தின் முன்னணி பரிசோதனை மையமாக தொடர்ந்து இருந்து வருகிறோம். அதுமட்டும் இன்றி மத்திய அரசின் என்.ஏ.பி.எல் சான்றிதழ் பெற்ற பரிசோதனை மையமாகவும் நாங்கள் விளங்குகிறோம்.

 

இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் மேலும் 40 புதிய கிளைகளை நிறுவ திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் தமிழகம் முழுவதும் 100 கிளைகளை கொண்ட பரிசோதனை மையமாக ஹைடெக் டைக்னோஸ்டிக் செண்டர் திகழப்போகிறது. அதன் பிறகு தென்னிந்தியா முழுவதும் எங்களது கிளைகளை தொடங்க இருக்கிறோம். தற்போது பெங்களூர் மற்றும் கேரள மாநிலத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு ஹைடெக் டைக்னோஸ்டிக் செண்டர்கள் இயங்கி வந்தாலும், எதிர்காலத்தில் அங்கே பல கிளைகளை திறக்க போகிறோம். அதாவது தமிழகத்தை தவிர மற்ற தென்னிந்திய மாநிலங்களில் சுமார் 100 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம்.

 

சாதாரண காய்ச்சல், சர்க்கரை, கிட்னி, இருதயம் சம்மந்தமான நோய்கள், எய்ட்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான நோய்கள் என 1300 வகையான ரத்த பரிசோதனை செய்யும் வசதி ஹைடெக் டைக்னோஸ்டிக் செண்டரில் இருக்கிறது.” என்று தெரிவித்தார்.