VeCura ReSculpt இன் புதிய கிளை சென்னை, தி.நகரில் திறப்பு
அழகியல் துறையில் தனித்துவமிக்க VeCura ReSculpt இன் புதிய கிளையை சென்னை, தி.நகரில் நடிகை ஆல்யா மானசா மற்றும் பிரபா ரெட்டி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் முன்னணி மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
VeCura ReSculpt கிளினிக்கில், சர்வதேச தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அவற்றில், CoolSculpting® மற்றும் CoolTech ,Tesla Former, Tesla Pelvic Chair, Evolve X மற்றும் Ultratone, Venus Legacy, AI Master, Whole Body Cryotherapy மற்றும் Ballancer Pro – உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.
அறுவைசிகிச்சை இன்றி, அறிவியல் பூர்வமாக உடல் வடிவமைப்புக்கு புதிய வரையறை உருவாக்கிய VeCura நிறுவனத்தின், அடுத்த தலைமுறை அழகியல் மற்றும் உடல் வடிவமைப்பு கிளினிக்கான VeCura ReSculpt, தென்னிந்தியாவில் தனது தடத்தைப் பதித்துள்ளது.
சென்னை தி. நகரில் நடைபெற்ற பிரமாண்ட தொடக்க விழா மூலம், இந்தியாவில் தனது அதிகாரப்பூர்வ அறிமுகத்தை VeCura ReSculpt பெற்றது.
உடல் தோற்றத்தை அழகியலோடு மறுவரையறை செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்ட VeCura ReSculpt, மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம், தரவுகளின் அடிப்படையிலான ஆய்வு முறைகள் மற்றும் தனிநபர் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட சிகிச்சை திட்டங்களை ஒரே இடத்தில் வழங்குகிறது.
ஹைதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களில் விரிவாக்கம் செய்ய உறுதியான திட்டங்களுடன், தென்னிந்தியாவின் முக்கிய மாநகரங்களில் வலுவான இருப்பை உருவாக்குவதே இந்த பிராண்டின் இலக்காகும்.
சென்னையின் கிளை திறப்பு விழாவை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட, நடிகையும் தொலைக்காட்சி பிரபலமுமான ஆல்யா மானசா தொடங்கி வைத்தார். அவருடன், இந்த நிகழ்வில் VeCura ReSculpt Director திருமதி கரோலின் பிரபா ரெட்டி, Vcare குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முகுந்தன் சத்தியநாராயணன், டாக்டர் ராம் கௌதம் மற்றும் முன்னணி மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இது மருத்துவ வழிகாட்டுதலுடன், நெறிமுறையுடனான அழகியல் தீர்வுகளுக்கான அதிகரித்து வரும் தேவையை பிரதிபலிக்கிறது.
VeCura ReSculpt, பொதுவான அழகியல் சிகிச்சைகளிலிருந்து விலகி, முன் புரிதலை தலைமைப்படுத்தி, கட்டமைக்கப்பட்ட மற்றும் அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய திட்டங்களை வழங்கும் கிளினிக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
VeCura ReSculpt- ஒரு தெளிவான வழிகாட்டும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. மாற்றம் என்பது அறிவியல் சார்ந்ததும், தனிப்பயனாக்கப்பட்டதும், பாதுகாப்பானதும் ஆக வேண்டும். அதன் அடிப்படையில், இந்த கிளினிக்கில் அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு தொழில்நுட்பமும் உலகளாவிய மருத்துவச் சான்றுகள், பாதுகாப்பு நிலைப்பாடுகள் மற்றும் நீண்டகால உடல் இயல்பியல் தாக்கங்களை கருத்தில் கொண்டு கடுமையான மருத்துவ மதிப்பீட்டின் பின்னரே தேர்வு செய்யப்படுகிறது.
இந்த நடைமுறைகளை மருத்துவர். ராம் கௌதம், MS (ஆர்த்தோ), MBA தலைமை தாங்குகிறார். இவர் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் VeCura ReSculpt-இன் இயக்குனர் மற்றும் தலைவராகவும் செயல்படுகிறார்.
எலும்பியல் மற்றும் விளையாட்டு மருத்துவத்தில் கொண்டுள்ள அனுபவம் மூலம், வலுவான அடித்தளத்துடன், உடற்கூறியல் மற்றும் ஆதார அடிப்படையிலான அணுகுமுறையை அழகியல் பராமரிப்பில் மருத்துவர் ராம் கௌதம் கொண்டு வருகிறார்.
VeCura ReSculpt- ன் இலக்கு உடல் வடிவத்தை மாற்றுவதில் மட்டும் அல்ல என்று குறிப்பிடும், மருத்துவர். ராம் கௌதம், சர்வதேச தரத்தில், அறுவை சிகிச்சை இல்லாத தொழில்நுட்பங்கள் மூலம் நம்பிக்கையை வளர்த்தல்,சமநிலையை மீட்டெடுத்தல் ,ஒட்டுமொத்த நலனைக் காத்தல் ஆகியவையே தங்களுடைய நோக்கம் என்கிறார்.
ஒவ்வொரு மாற்றமும் கண்டறிதல், தரவுகள் மற்றும் தனிநபரின் உடல் இயல்பியலை ஆழமாகப் புரிந்து கொள்வதிலிருந்தே தொடங்குகிறது என்று கூறும், அவரது மருத்துவத் தலைமையின் கீழ், அனைத்து சிகிச்சைகளும் முழுமையான ஆலோசனைகள், மதிப்பீடுகள் மற்றும் பொருத்தத் தேர்வுகளுக்குப் பிறகே மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் பொறுப்பான, நிஜமான மற்றும் பயனர் மையப்படுத்தப்பட்ட முடிவுகள் உறுதி செய்யப்படுகின்றன.
VeCura ReSculpt, உலகின் முன்னணி அழகியல் மற்றும் உடல் வடிவமைப்பு தொழில்நுட்பங்களை அறுவை சிகிச்சையின்றி ஒருங்கிணைக்கிறது. அதன் ஆய்வு அணுகுமுறையின் மையமாக STYKU® 3D Body Analysis உள்ளது. இது உடல் அமைப்பு, உடல் நிலை (posture) மற்றும் அளவீடுகள் குறித்த துல்லியமான தகவல்களை வழங்கி, மிகுந்த தனிப் பயனாக்கப்பட்ட சிகிச்சை திட்டங்களை உருவாக்க உதவுகிறது.
ஒவ்வொரு தொழில்நுட்பமும் தனிநபரின் இலக்குகள் மற்றும் மருத்துவப் பொருத்தத்தைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு நெறிமுறையுடன் பயன்படுத்தப்படுகிறது.
VeCura ReSculpt-க்கு Director மற்றும் தலைவராக இருந்து, E. கரோலின் பிரபா ரெட்டி வழிகாட்டுகிறார்.நேர்மை, சமரசமில்லாத தரம் மற்றும் மருத்துவ சிறப்புமிக்க ஒரு சுகாதார பிராண்டை உருவாக்குவதே அவரது இலக்கு. ஒரு கிளினிக்கைக் கட்டமைப்பதைவிட மேலாக, ஒரு தரநிலையை உருவாக்குகிறோம் என்று பிரபா ரெட்டி இந்நிகழ்ச்சியின்போது தெரிவித்தார்.
ஹைதராபாத் மற்றும் பெங்களூருவிற்கு விரிவாக்கம் செய்யும் போதும், ஒரே மாதிரியான மருத்துவத் தரம், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட பயனர் அனுபவத்தை வழங்குவதில் தாங்கள் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தென்னிந்தியா முழுவதும் விரிவடையத் தயாராகும் இந்த பிராண்டு, அறிவியலில் அடிப்படையிலான, நிபுணத்துவத்தால் வழிநடத்தப்பட்டு, அக்கறையுடன் வழங்கப்படும் அறுவைசிகிச்சை இல்லாத அழகியல் மற்றும் உடல் வடிவமைப்பு சிகிச்சைகளின் அனுபவத்தை மறுவரையறை செய்ய இலக்கு கொண்டுள்ளது.
VeCura ReSculpt :-புதிய கதவு எண். 8, தரை தளம் மற்றும் முதல் தளம் டாக்டர் பி.என். சாலை,N Boag Rd, தி. நகர், சென்னை-600017






