Dec 19, 2019 12:13 PM

மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு எளிமையான தீர்வு!

065d2ae443c7348a94f221bcf936a332.jpg

மூட்டு வலியால் அவதிப்படும் முதியவர்களுக்கு எளிமையான சிகிச்சை மூலம் தீர்வு காண்பதோடு, அவர்களை மீண்டும் நடக்கச் செய்யும் குருத்தெலும்பு மாற்றுப்பதிய அறுவை சிகிச்சையை சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

 

ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், சமீபத்தில் 72 வயதாகும் மூதாட்டியின் முழங்காலில் இருந்த குருத்தெலும்பு மூட்டு குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்க  (AACT) என்ற எதிர்காலத்திற்குரிய முடக்கு நீக்கவியல் சார்ந்த சாவித்துளை மாற்றுப்பதிய சிகிச்சையை செய்திருக்கின்றனர்.  குருத்தெலும்பை மாற்றுப்பதியம் செய்வதற்கான இந்த சிகிச்சை செயல்முறை சென்னையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். 

 

ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவரும், விபத்து காயம் மற்றும் முடக்கு நீக்கவியல் அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர். நந்த குமார் சுந்தரம்  தலைமையிலான மருத்துவர்கள் குழு இச்சாதனையை செய்திருக்கிறது.  

 

70 வயதைக் கடந்திருக்கும் இந்நோயாளி படிக்கட்டில் ஏறும்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்ததற்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடப்பதில் அதிக சிரமம் அவருக்கு இதனால் இருந்தது. மருத்துவ பரிசோதனை செய்ததற்குப் பிறகு குருத்தெலும்பு அழற்சி விரிசல்கள் என்ற பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  குருத்தெலும்பும், அதற்கு கீழே உள்ள மூட்டின் எலும்பு கட்டமைப்பும் சேதமடைந்திருக்கும் நிலையையே இது குறிக்கிறது. வழக்கமான தினசரி செயல்பாடுகளை செய்ய முடியாதவாறு திறனிழப்பிற்கு இது வழிவகுக்கும்.  

 

ஒரு ஏஏசிடி சிகிச்சை செய்முறையானது, இதற்கு சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்பட்டது மற்றும் குருத்தெலும்பு மூட்டு சிதைவுகளுக்கு சிகிச்சையளிக்க இந்த சிகிச்சைமுறை அதன்பிறகு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இப்புதிய உத்தியானது, குருத்தெலும்பு மூட்டு சிதைவுகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு பயோஆக்டிவ் பொருளின் பயன்பாட்டோடு சேர்த்து, சாவித்துவாரம் வழியாக ஆரோக்கியமான குருத்தெலும்பு திசுக்களை மறுபதியம் செய்கிறது.  இதன்மூலம் அறுவைசிகிச்சையிலிருந்து மீண்டு குணமைடையும் காலஅளவு குறைக்கப்படுகிறது.  இந்த புதிய உத்தியானது, பாரம்பரியமான ஆட்டோலோகஸ் கோன்ட்ரோசைட் இம்ப்ளான்டேஷன் (ACI) என்பதைவிட சிறப்பானது.  புதிய உத்தியில் மிக மிக குறைவான சிக்கல்களே இருக்கின்றன மற்றும் இயல்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிவிரைவாக குணமடைவது இதில் சாத்தியமாகிறது.  இந்த வெற்றிகரமான மாற்றுப்பதிய சிகிச்சைக்குப் பிறகு ஒரு நாள் கழித்து, நோயாளியால் அவராகவே எழுந்து நிற்கவும் மற்றும் நடக்கவும் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

Fortis Malar Hospital

 

இந்த புதிய சிகிச்சை முறை குறித்து விளக்கமளித்த டாக்டர் நந்த குமார் சுந்தரம், “குருத்தெலும்பு குறைபாடுகளை சரிசெய்வதற்கான பிற சிகிச்சை முறைகளைவிட ஏஏசிடி சிகிச்சைமுறையின் ஆதாயம் என்னவென்றால், ஒற்றை அறுவைசிகிச்சை செயல்முறையில் இதனை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்பதே.  உயிரணு வளர்ப்பிற்கான கடினமான செய்முறையை அல்லது மூட்டுகளை தாங்கிப்பிடிப்பதற்கு தனி அமைப்பை உருவாக்குவது என்ற பிரச்சனைகளை இது தவிர்க்கிறது.  இந்த ஒட்டுமொத்த சிகிச்சைமுறையில் நோயாளியின் உடலிலிருந்தே எடுக்கப்படும் செல் அடிப்படையிலானது.  இந்த ஒட்டுமொத்த சிகிச்சைமுறையின்போதும் எந்த வேதியியல் செயலிகளும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதே இதன் அர்த்தமாகும்.  ஆகவே, அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்துதவற்கு முற்றிலும் பாதுகாப்பான சிகிச்சை செயல்முறையாக இது இருக்கிறது.  இந்த ஏஏசிடி (மாற்றுப்பதிய சிகிச்சை முறையானது, வழக்கமான குருத்தெலும்பு மாற்றுப்பதிய சிகிச்சைக்கு திறன்மிக்க ஒரு மாற்று வழிமுறையாக இருக்கிறது,” என்று கூறினார்.  

 

ஏஏசிடி என்பது, நோயாளியின் முழங்காலிலிருந்து ஆரோக்கியமான மூட்டு குருத்தெலும்பின் ஒரு சிறு பகுதியை அறுவைசிகிச்சை நிபுணர் சேகரித்து அதனை குருதித்தட்டு செறிவாக உள்ள பிளாஸ்மாவோடு ஒருங்கிணைத்து, அதனை சிதைவுகள் உள்ள இடத்தில் ஒரு ஆட்டோலோகஸ் (ஃபைப்ரின்) என்பதன் உதவியோடு, பொருத்துகிறார்.  ஏஏசிடி என்ற இச்சிகிச்சை முறை, குருத்தெலும்பு சிதைவுகள், பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு பாதுகாப்பான, ஒற்றை அமர்வில் செய்து முடிக்கக்கூடிய சிக்கனமான  ஒரு சிகிச்சை செயல்முறையாகும்.