Sep 09, 2023 03:49 PM

சென்னை ஆர்.கே.சாலையில் ’நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ புதிய கிளை! - நடிகை நீலிமா இசை தொடங்கினார்

c5d5e998b749975aee4d392cba0bf444.jpg

தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், சினிமாத்துறையில் பணியாற்றும் பெண்கள் கூட கலைத்துறையை தவிர்த்து பிற தொழில்களிலும் தங்களை ஈடுபடுத்தி வளர்ந்து வருகிறார்கள்.

 

அந்த வகையில், தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகையாக வலம் வரும் நீலிமா இசை, சர்வதேச அளவில் புகழ் பெற்ற அழகு நிலையத்தின் புதிய கிளையை சென்னையின் முக்கிய பகுதியில் தொடங்கியுள்ளார்.

 

அழகு கலை நிபுணத்துவத்தில் முக்கிய பங்காற்றி வரும் நேச்சுரல்ஸ் இந்திய அளவில் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்ந்து வருவதோடு, பல பெண்களை தொழில் முனைவர்களாகவும் உருவாக்கி வரும் நிலையில், இந்த நிறுவனத்தின் புதிய கிளையை நடிகை நீலிமா இசை, சென்னையின் மிக முக்கியமான பகுதியில் தொடங்கியுள்ளார்.

 

‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த அழகு  எஸ்.பி.சரண் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது தொழிலதிபர்கள் இளங்கோவன், வீணா குமரவேல் மற்றும் சி. கே. குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு, நடிகை நீலிமா இசை மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

 

வெள்ளித்திரை, சின்னத்திரை, டிஜிட்டல் திரை ஆகிய திரைகளில் தன்னுடைய தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நடிகை நீலிமா இசை, புதிதாக 'நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்' எனும் அழகு நிலையத்தை தொடங்கியதன் மூலம் தன்னுடைய சேவையை இளம்பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும், பெண்மணிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கிறார். 

 

தொடர்ந்து புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் இறங்கி பணியாற்றி வரும் அவருக்கு சமூக ஊடகங்கள் வழியாகவும், நேரிலும் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.