May 25, 2024 07:31 AM

’இமேஜ் ஆர்ட் சேலஞ்ச் 2024’-ன் பரிசு வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது!

857a4dc9f6e2d213d4bbe87c5a7c64f5.jpg

இமேஜ் குழுமத்தின் இமேஜ் ஆர்ட் சேலஞ்ச் 2024 அதன் பரிசு வழங்கும் விழா இன்று ( மே  25 ) சென்னை, எழும்பூரில் உள்ள அருங்காட்சியகம் கலையரங்கில் நடைபெறுகிறது. இதில் ஐந்து பிரிவுகளில் முதல் மூன்று பரிசுகளை பெரும் வெற்றியாளர்களுக்கு ரூ.10 லட்சம் பெறுமானமுள்ள பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. மற்ற 100 இறுதிப் போட்டியாளர்களுக்கு ரூ.25 லட்சம்  பெறுமானமுள்ள பரிசுத்தொகை  சிறப்புப் பரிசுகளாக வழங்கப்படுகிறது.

 

இமேஜ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கே. குமார் அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய கலைப் (DRAWING) போட்டியான ’இமேஜ் ஆர்ட் சேலஞ்ச்’ (IAC – IMAGE ART CHALLENGE) 2024 முடிவடைந்ததை இமேஜ் குரூப் பெருமையுடன் மக்களுக்கு அறிவித்துள்ளது.

 

படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை வளர்க்கும் வளமான பாரம்பரியத்துடன், இமேஜ் குரூப் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வயதினரும்  தங்கள் கலைத் திறன்களை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் மீண்டும் சாதனை படைத்துள்ளது.

 

சப்-ஜூனியர் (வயது 6 முதல் 9 வரை), ஜூனியர் (வயது 10 முதல் 14 வரை), சீனியர் (வயது 15 முதல் 19 வரை), சூப்பர் சீனியர் (வயது 18 முதல் 20 வரை) மற்றும் புரொபஷனல் (வயது 21 மற்றும் அதற்கு மேல்), ஆகிய ஐந்து பிரிவுகளுடன் IAC வழங்கப்பட்டது. அனைத்து வயதினரும் பங்கேற்பாளர்கள் தங்களுக்கு ஏற்ற விதத்தில் தங்களின் கலைத் திறனை வெளிப்படுத்தவும் பெரிய பரிசுகளுக்காக போட்டியிடவும் ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

 

உலகம் முழுவதிலுமிருந்து மற்றும் இந்தியாவிலிருந்தும் நன்கு அறியப்பட்ட கலைஞர்களை உள்ளடக்கிய எங்கள் மதிப்பிற்குரிய நடுவர் குழு பல மாதங்கள் கவனமாக மதிப்பாய்வு செய்த பின்னர், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று வெற்றியாளர்களை அருங்காட்சியகம் கலையரங்கில் நடைபெறும் பரிசு வழங்கும் விழாவில் அறிவிக்கப்படுவார்கள்.

 

தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் மாநில அதிகாரி ரூஃபஸ் எச்.கே.ஜார்ஜ் (Rufus H K George) மற்றும் ‘ஆர் ஆர்ட் ஒர்க்ஸ் விஷுவல் ஸ்டுடியோ (R-ART WORKS VISUAL STUDIO)-வின் நிறுவனர் மற்றும் படைப்பு தலைவர் ரமேஷ் ஆச்சார்யா சிறப்பு தலைமை விருந்தினர்களாக கலந்துக்கொண்டு, இமேஜ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.குமாருடன் இணைந்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்க இருக்கிறார்கள்.

 

அனைத்துப் பிரிவுகளிலும் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ. 50,000 மற்றும் மூன்றாம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ. 25,000 வழங்கப்படும்.

 

இறுதிச் சுற்றுக்கு வந்துள்ள 100-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதில் சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளுக்கான இமேஜ் மைண்ட்ஸின் ஆக்கப்பூர்வமான படிப்பதற்கான பொருட்கள் அடங்கும். இந்தக் பொருட்கள் அவர்களுக்கு STEAM கல்வி மற்றும் கலை-ஒருங்கிணைந்த கற்றல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, அவர்களின் படைப்புத் திறன்களை மேலும் மேம்படுத்த உதவும்.

சூப்பர் சீனியர் மற்றும் புரொபஷனல் பிரிவு வெற்றியாளர்களுக்கு சிறப்புப் பரிசுகளாக ஸ்மார்ட் வாட்ச்கள் வழங்கப்படுகிறது.

 

இமேஜ் குரூப்பை பற்றிய விவரம் : 

 

இமேஜ் குரூப் (www.imagegroup.in) என்பது படைப்பாற்றல் கல்வியை வழங்கும் நாட்டின் முன்னணி நிறுவனமாகும்.  இமேஜ் குழுமத்தின் கீழ் பல கிளை கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன, அவற்றில் சில

ICAT டிசைன் மற்றும்  ஊடகக் கல்லூரி (www.icat.ac.in), இமேஜ் கிரியேட்டிவ் எஜிகேஷன் (www.image.edu.in) மற்றும் இமேஜ் மைண்ட்ஸ் (www.imageminds) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

 

இந்த நிறுவனத்தின் நோக்கம் எல்லா வயதினருக்கும் தங்கள் படைப்புத் தொழில்நுட்பம், கலை மற்றும் வடிவமைப்பு திறன்களை வளர்த்துக் கொள்ள அதிகாரம் அளிப்பதுடன், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த அவர்களைத் தயார்படுத்துகிறது.

 

நாட்டின் மிகப்பெரிய படைப்பாற்றல் சார்ந்த கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நிறுவனத்தை ஆரம்பித்த கே.குமார், தனது தொலைநோக்கு சிந்தனையால் இமேஜ் குழுவை வழிநடத்திச் செல்கிறார். அவரது புத்திசாலித்தனமான மற்றும் விவேகமான முடிவெடுப்பதன் மூலம், இமேஜ் குரூப் அதன் ஆக்கப்பூர்வமான கல்விகளை  வழங்குவதில் இந்தியாவின்  ஒரு முன்னோடியாக மட்டுமல்லாமல், தேசத்தின் தலைசிறந்த நபராகவும் வலம் வருகிறார். தனது நிறுவனம் மூலம் நேரடியாக 7,500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருப்பவர், 2,500 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளை கொடுக்கிறார். 

 

இமேஜ் குரூப் பல்வேறு வயதினருக்கான ஆக்கப்பூர்வமான கல்வி நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகளை நிறுவுவதைத் தவிர, கடந்த மூன்று ஆண்டுகளாக இமேஜ் குரூப் பல முக்கிய முயற்சிகள் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. ஏவிஜிசி துறை உட்பட நாட்டின் படைப்புத் துறையில் அவரது பங்களிப்பு இத்துடன் முடிவடையாது.

 

இமேஜ் குரூப் பல முக்கியமான முன்முயற்சிகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான திட்டங்களை மேற்கொள்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கே.குமார், இவைகள் மட்டும் இன்றி, ஏவிஜிசி (AVGC) துறை உட்பட நாட்டின் படைப்புத் துறையில் தனது மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார்

 

இமேஜ் குழுமத்தின் நிறுவனம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.குமார், தனது படைப்பாற்றலை இத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், இத்துறையில் பல்வேறு புதிய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் தனது பயணத்தை தொடர்ந்துக்கொண்டே இருப்பார்.