Jun 22, 2020 11:14 AM

கொரோனாவை குணப்படுத்தும் அக்குபங்சர் சிகிச்சை! - அசத்தும் சென்னை மருத்துவர்

6be4d47f2f740ff8af0f54be02d39bd2.jpg

கொரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கி உலகமே கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கொரோனாவை விரட்டியடிக்கும் சக்தி அக்குபங்சர் சிகிச்சைக்கு இருக்கிறது, என்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அக்குபங்சர் சிகிச்சையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சென்னையை சேர்ந்த டாக்டர்.சங்கர் கோவிட்-19 வைரஸ்களுக்கு கிடுக்கிப்பிடி கொடுக்கும் சிகிச்சையை தன் அனுபவ ஆராய்ச்சிகளால் கண்டறிந்துள்ளார்.

 

சென்னை, தி.நகரில் ஹைக்யூர் அக்குபங்சர் சிகிச்சை மையத்தை நடத்தி வருபவரும், Complementary Medical Academy of Acupuncture Science என்ற அமைப்பின் நிறுவனர் தலைவருமான டாக்டர்.எம்.என்.சங்கர், சுமார் 30 வருடங்களாக அக்குபங்சர் சிகிச்சைகளை வழங்கி வருகிறார். 

 

சீனாவுக்குச் சென்று முறையாகப் அக்குபங்சர் சிகிச்சையை பயின்று வந்திருக்கும் டாக்டர்.எம்.என்.சங்கரிடம், அக்குபங்சர் சிகிச்சையில் கொரோனாவை குணப்படுத்தும் முறை குறித்து கேட்ட போது, “உடலில் இருக்கும் சில சக்தி புள்ளிகளை அக்குபங்க்சர் மூலம் தூண்டி விடும்போது, நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்யும் சுரப்புகளை எளிதில் உருவாக்கலாம். அதன் மூலம் உடல் வலுப்பெறும். கோவிட்-19 கிருமிகள் உடலைப் பாதிக்காது. அதையும் மீறி நோய்த் தொற்று ஏற்பட்டு விட்டாலும், உடல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்காக்கும் அளப்பரிய சக்தி அக்குபங்சர் சிகிச்சைகளால் சாத்தியமாகும்.” என்று கூறினார்.

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்வதற்கு அக்குபங்சர் மருத்துவத்தையும் அங்கீகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் கொரோனா தடுப்புக்கு அக்குபஞ்சர் மருத்துவத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

சீனாவில் அக்குபங்சர் சிகிச்சை மூலம் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக சங்கர் குறிப்பிட்டதை தமிழக அரசின் மாநில திட்டக் குழுவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அக்குபங்சர் சிகிச்சைகளை கோவிட்-19 நோயாளிகளுக்குக் கொடுக்க பரிசீலிக்கும்படி தலைமைச் செயலாளருக்கும் மாநில அரசின் சுகாதாரத்துறைக்கும் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது. 

 

“சீனாவின் ஊஹான் மாநிலத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ், ஊபே விமானநிலையத்தில் இருந்து உலகெங்கும் பயணம் செய்தவர்கள் மூலம் உலகம் முழுக்கப் பரவியது என்கிறார்கள். ஆனால் சீனாவில் இரண்டேகால் கோடிப் பேர் வசிக்கும் பெய்ஜிங், இரண்டே முக்கால் கோடிப் பேர் வசிக்கும் ஷாங்காய் நகரங்களில் இதன் தொற்று அதிகம் ஏற்படவில்லை. காரணம் என்ன தெரியுமா?” என்று கேட்ட சங்கர், அவரே பதிலையும் விவரித்தார். 

 

“சீனாவில் கிராமம் தோறும் அக்குபங்சர் சிகிச்சை மக்களுக்குக் கொடுக்கப்படுகிறது. நோய்கள் வந்தால் தான் என்றில்லை, வருமுன் காப்பதற்காகவே கொடுக்கப்படுகிறது. கிராமங்களில் Bare Foot Doctors என அடிப்படை வைத்தியம் தெரிந்த மருத்துவர்கள் உண்டு. நம்மூர் ரேஷன் கடைகள் போல அங்கே ஒவ்வொரு ஊரிலும் கிராம சபைகள் இருக்கும். கிராமசபைகளுக்கு வரும் மக்களுக்கு அங்கேயே அக்குபங்சர் சிகிச்சைகள் கொடுப்பார்கள். இதை நான் சீனாவில் தங்கிப் படிக்கும் காலத்தில் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். வெள்ளம் வரும் காலங்களிலும், முன் பனிக்காலங்களிலும், பின் பனிக்காலங்களிலும், முறையும் தட்பவெப்ப நிலை மாறும் ஒவ்வொரு முறையும் கிராமசபைகளில் அக்குபங்சர் சிகிச்சைகள் கொடுத்து, நோய்த் தொற்றுக்கு எதிராக மக்களைத் தயார்ப்படுத்துவார்கள். கொரோனா தொற்றில் இருந்தும் சீன மக்கள் பெருமளவு உயிர்ச்சேதமில்லாமல் தப்பித்தது இப்படித்தான்..” என்றார். 

 

Ponnaiyan Letter

 

“உடலில் இருக்கும் குறிப்பிட்ட சில சக்தி புள்ளிகளில் அக்குபங்சர் சிகிச்சை கொடுக்கும்போது ஆல்ஃபா இம்யுனோ க்ளோபின், எண்டார்ஃபின், எபிநார்பின், செரட்டோனின், காமா அமினோ ப்யூட்ரிக் அமிலம் போன்ற வினையூக்கிகள் உடலுக்குள் தாமாகவே சுரக்கின்றன. அவை நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக்கின்றன. 461 நோய்களை அக்குபங்சர் சிகிச்சை முறையினால் குணமாக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்கள் சீன மருத்துவர்கள். அதில் பலவற்றை உலக சுகாதார நிறுவனமும் அங்கீகரித்திருக்கிறது. WHOன் இணையத்தளத்துக்குச் சென்று, அக்குபங்சரால் குணமாக்கும் நோய்களின் பட்டியலை நீங்களே பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். என்னிடம் வருபவர்கள் ஆண்டி-கொரோனா நீடில் போடுங்க டாக்டர் எனக் கேட்டு, அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்கிறார்கள். என்னிடம் தான் வரவேண்டும் என்றில்லை, அனுபவம் கொண்ட அக்குபங்சர் நிபுணர்களை அணுகி இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். வர்மக்கலை என்ற பெயரில் தமிழர்கள் மூலம் சீனாவுக்குச் சென்று, அங்கிருந்து அக்குபங்சர் ஆக உலகம் முழுதும் பரவியிருக்கும் இந்த அற்புத சிகிச்சை முறையின் மூலம் கொரோனா கிருமிக்கு எதிராகப் போராடி ஜெயிக்கலாம்..” என்றும் கூறினார் டாக்டர்.சங்கர். 

 

கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்த இன்னமும் அதிகாரப்பூர்வமாக ஆங்கில மருந்துகள் உருவாக்கப்படாத சூழலில், வரப்பிரசாதமாக கைவசம் இருக்கும் அக்குபங்சர் சிகிச்சையை முறையை மேற்கொள்ளலாமே.

 

டாக்டர்.எம்.என்.சங்கரின் ஹைக்யூர் அக்குபங்சர் க்ளினிக் முகவரி: 

 

Complementary Medical Academy of Acupuncture Science (Registered No.197/96)

No.32.Thanikachalam Road, 

T.Nagar, Chennai 17.

+91 44 24323899 / 98417 14000 / 93810 45151