Aug 04, 2023 07:17 PM

அப்துல் கலாமின் நினைவு நாளில் வெளியிடப்பட்ட டாக்டர்.ஷீபா லூர்தஸின் இரண்டு புத்தகங்கள்

372881b0b7209a1e138d26f08204eac5.jpg

ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு (UNITED SAMARITAN INDIA FOUNDATION) இந்தியா அறக்கட்டளை‌ சார்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு, அந்த அமைப்பின் நிறுவனர் டாக்டர்.ஷீபா லூர்தஸ் எழுதிய  ’I AM TOUGH...BECAUSE I AM GOOD & MAGIC OF QUIET EGO’ எனும் இரண்டு புத்தக வெளியீடு, 2500 பேர் கண் தானம் செய்தவர்களுக்கு  சான்றளிப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்று திறனாளிகளை கௌரவப்படுத்தும் நிகழ்வு, தி டைம்ஸ் ஆஃப் யுனைடெட் சமரிடன்ஸ் எனும் பத்திரிகை வெளியீடு, Eternal Gift எனும் குறும்படத்தின் போஸ்டர் வெளியீடு மற்றும் மொஹமத் சதக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை 'ஒற்றுமைக்கான புது முயற்சி' (The Togetherness Initiative) எனும் தலைப்பில் சோழிங்கநல்லூரில் உள்ள முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

 

இவ்விழாவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாட்டு துணைத்தலைவரான சங்கர் நாகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இவர்களுடன் தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திர நடிகரான பப்லு பிருத்விராஜ்,  இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகை ரேகா நாயர் உள்ளிட்ட பலர்   கலந்துக் கொண்டனர்.

 

Dr.Sheeba Lourdhes

 

முகமது சதக் கலை & அறிவியல் கல்லூரி, ஆசான் மெமோரியல் கலை & அறிவியல் கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி, காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி  ஆகிய நான்கு கல்லூரியைச் சேர்ந்த 2500 மாணவ மாணவிகள் தங்களுடைய கண்களை தானமாக பெறுவதற்கு ஒப்புதல் சான்றை வழங்கினார்கள்.

 

Dr.Sheeba Lourdhes

 

UNITED SAMARITAN INDIA FOUNDATION அமைப்பின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான டாக்டர்.ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes) இயக்கத்தில் உருவாகும் ’எடனர்ல் கிஃப்ட் ’ (Eternal Gift) எனும் குறும்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டத. ETERNAL GIFT என்கிற குறும்படம் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பின் மூலம் 25-க்கும் மேற்பட்ட உலக திரைப்பட விழாக்களில் இந்தியா சார்பாக பங்கேற்க உள்ளது.

 

Dr.Sheeba Lourdhes

 

இதைத் தவிர்த்து வருகை தந்திருக்கும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 

 

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை உயர் அதிகாரி பி.சுபா நந்தினி, ‌ கண் மருத்துவ நிபுணர் டாக்டர்.எம்.ஆர்.சித்ரா,  தாம்பரம் மாவட்ட வருவாய் துறை உயர் அதிகாரி வி.செல்வகுமார், முகமது சதக் கலை அறிவியல் கல்லூரியின் இயக்குனர் ஜனா எஸ்.எம்.ஏ.ஜே.அப்துல் ஹலீம்,  தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல இயக்கத்தின் உறுப்பினரும் பேராசிரியருமானதீபக் நாதன், செங்கல்பட்டு மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட செயலாளர் புலவர் ஆர்.மாணிக்கம் மற்றும் கவிஞர் க.மணி எழிலன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டனர். 

 

Dr.Sheeba Lourdhes

 

இந்நிகழ்வு ஐக்கிய நாட்டு சபையின் பதிவு பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு   மற்றும் அதன் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்திருப்பதால், இந்த நிகழ்வு சர்வதேச அளவிலான கவனத்தை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Dr.Sheeba Lourdhes