Jul 01, 2018 11:13 AM

”யோகாவை விட தியான யோகாவே சிறந்தது” - தமிழ்வேல் சுவாமிகள்

40b742f00cdd58607be5132447f531e0.jpg

மக்களின் வாழ்க்கை முறையில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்களால், அவர்களது உடல் ஆரோக்யம் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. அதே சமயம், பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறைக் கொண்டு பல்வேறு உடற்பயிற்சி செய்வதையும், ஆரோக்கியமான உணவு உற்கொள்வதையும் கடைபிடித்து வந்தாலும், மன ரீதியாக பலவீனமாகவே இருக்கிறார்கள். அப்படி இல்லாமல், ஒருவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலமாக இருக்க வேண்டும் என்றால் அது தியான யோகாவல் மட்டுமே முடியும், என்கிறார் தமிழ்வேல் சுவாமிகள்.

 

ஈரோடு, சென்னிமலை ரோட்டில் உள்ள முத்தம்பாளையத்தில் இருக்கிறது ஞானகுரு தபோவனம் ஆசிரமம். இந்த ஆசிரமத்தை அங்கு நிறுவி கடந்த 15 ஆண்டுகளாக மக்களுக்கு இலவசமாக தியா யோகா பயிற்சி அளித்து வருகிறார் தமிழ்வேல் சுவாமிகள்.

 

தனது குருநாதர் வேணுகோபால் சுவாமிகளிடம் இருந்து கற்றுக்கொண்ட இந்த தியான யோகா பயிற்சியை, மக்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுத்து வரும் தமிழ்வேல் சுவாமிகளிடம் பேசிய போது, “இன்றைய அவசர உலகில் மக்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதோடு, மன ஆரோக்கியத்தையும் பேணுவது அவசியம். யோகா பயிற்சி என்பது ஆரோக்கியமான் ஒன்று தான் என்றாலும், அதை தியானத்தோடு சேர்த்து செய்வதன் மூலம் நமக்கு பேராற்றல் கிடைக்கும்.

 

யோகா பயிற்சியை பொருத்தவரை குறிப்பிட்ட சில பயிற்சிகளை கற்றுக்கொடுத்துவிட்டு அதையே திரும்ப திரும்ப செய்யும் போது ஒரு கட்டத்தில், அந்த பயிற்சிகளுக்கான பலன் கிடைக்காமலே போய்விடும். ஆனால், தியான யோகாவை பொருத்தவரை 1000 க்கும் மேலான வகையில் செய்முறைகள் இருப்பதோடு, தியானத்தோடு இதை செய்வதால் உடலை பலம்பெற செய்வதோடு, உணர்வுகளை தூய்மைப்படுத்தவும் முடியும். இதன் மூலம் ஆத்ம முக்தி நிலையை அடையும். அப்போது நம் சிந்தனைகள் சீராவதால், நாம் நினைத்த காரியங்கள் வெற்றியாகவே முடிகிறது.

 

அதுமட்டும் அல்ல, சர்க்கரை, புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இந்த தியான யோக பயிற்சி ரொம்பவே அவசியம். வெறும் உடலை மட்டுமே பலப்படுத்தாமல், தனது உள்ளத்தையும், உணர்வையும் பலப்படுத்தும் இந்த பயிற்சி மூலம் உடல் ஆரோக்கியத்தோடு, மன வலிமையும் பெற்று, வாழ்க்கையில் நினைத்ததை சாதித்து ஜெயிக்க முடியும்.” என்று தியான யோகா பற்றி கூறினார்.

 

Tamilvel Swamigal

 

ஈரோட்டில் உள்ள ஞானகுரு தபோவனத்தில் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை 11 மணி முதல் 1 மணி வரையிலும், பொதுமக்களுக்கு இலவசமாக தியான யோகா பயிற்சி அளிக்கும் தமிழ்வேல் சுவாமிகள், 1 மணிக்கு அன்னதானமும் வழங்குகிறார்.

 

சமீபத்தில் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சுமார் 1000 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தியான யோகா பயிற்சி அளித்த தமிழ்வேல் சுவாமிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல் துறையினருக்கும் தியான யோகா பயிற்சி அளித்துள்ளார்.

 

மக்களுக்கு நேரடியாக இந்த பயிற்சியை அளிக்கும் அவர் குழுவாக சேர்ந்து அவரை அனுகினால், தாங்கள் விரும்பும் இடத்திற்கே வந்து தியான யோகா பயிற்சி அளிக்கவும் தயாராக இருக்கிறார்.

 

நேரடியாக மட்டும் இன்றி விஜய் தொலைக்காட்சி மூலம், தினமும் காலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘நலமுடன் வாழ’ நிகழ்ச்சியின் மூலமாகவும் தியான யோகா பயிற்சி அளித்து வருகிறார்.