முன்னணி ஹீரோக்களுக்கு போட்டியாக பொங்கலுக்கு வெளியாகும் ‘ராட்ட’!
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
ராட்ட இன்றைய திரையுலகில் வருமானத்திற்காக மட்டும் திரைப்படம் எடுக்காமல் சமுதாயத்திற்காக வேண்டி ஒரு திரைப்படம் எஃப் எம் எஸ் மீடியாஸ் நிறுவனம் எடுத்துள்ளது. விசைத்தறி தொழிலை மையமாக வைத்து ஒரு வாழ்வியல் திரைப்படத்தை காதலோடு கண்ணியம் கலந்து கர்வத்தோடு எடுத்துள்ளது இது திரை சமூகம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் இத் திரைப்படத்தை சக்திவேல் நாகப்பன் இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு முன் சேமிப்பு என்ற பழக்கம் இல்லாத இளைஞன் திருமணத்திற்கு பின் அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்க அதன் மூலம் அவன் வாழ்வில் வரக்கூடிய மாற்றம், தன் கணவனின் சிரமத்தை புரிந்த மனைவி கணவனை எவ்வாறு தேற்றி வாழ்க்கையில் வெற்றி பெற இணைந்து பயணிக்கிறார்கள், இறுதியில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பது தான் இத்திரைப்படத்தின் மையக்கரு.
இத்திரைப்படத்தை விரைவில் சி எஸ் எம் கிரியேஷன் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட உள்ளது.
இத்திரைப்படத்தில் ஹெலன், சித்தா தர்ஷன், சாப்லின் பாலு, சந்திரன், கிருஷ்ணன், முத்துராஜா, பம்பாய் சுப்ரமணி,கல்பனா, வசந்தி, ஜெயஸ்ரீ ,ரத்னா, செல்லம்மா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
மணி கிருஷ்ணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
அனைத்து பணிகளும் முடிந்து சென்சார் பெற்று விரைவில் திரைக்கு வர உள்ள இப்படம் அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் மாபெரும் புத்தாண்டு பரிசாகவும், பொங்கல் கொண்டாட்டமாகவும் அமையும் என படத்தின் இயக்குநர் சக்திவேல் நாகப்பன் தெரிவித்துள்ளார்.

