ரத்தத்தில் கடிதம், இரண்டாவது திருமணம்! - மனம் திறந்த பூஜாவின் முன்னாள் கணவர்

தொலைக்காட்சி தொகுப்பாளர்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் இருக்கிறது. இதனால், பல தொலைக்காட்சி தொகுப்பாளர்களும், தொகுப்பாளினிகளும் தற்போது எளிதில் பிரபலமாவதோடு, அதன் மூலம் சினிமா வாய்ப்பும் பெற்று விடுகிறார்கள்.
அந்த வகையில், எஸ்.எஸ்.மியூசிக் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் இளசுகளின் பேவரை விஜே-க்களாக திகழ்ந்தவர்கள் பூஜா மற்றும் கிரேக். இருவரும் இசை தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, இவர்களது தனித்துவமான பேச்சு இவர்களை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்த்தது. அதிலும், கிரேக் சென்னை தமிழ் பேசுவதோடு, சரளமாக ஆங்கிலத்தையும் பேசியவாறு செய்யுன் லூட்டிகள் பியூட்டியாக இருந்ததால், அவருக்கு பெண் ரசிகர்கள் அதிகமாக இருந்தார்கள்.
இதற்கிடையே பூஜாவும், கிரேக்கும் கதாலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்கள். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த இவர்கள், 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
விவாகரத்துக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய பூஜா, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்த நிலையில், மலையாள நடிகர் ஜான் கொக்கேன் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். தனது புது கணவருடன் அவர் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்களையும் அவ்வபோது வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், விவாகரத்துக்குப் பிறகு ஆளே காணாமல் போன கிரேக், நீண்ட இடைவெளிக்கு பிறகு விவாகரத்து மற்றும் இரண்டாம் திருமணம் குறித்து பேசியிருக்கிறார். இது குறித்த அவரது சமீபத்திய பேட்டியில், தனக்கு பெண் ரசிகர்கள் அதிகமாக இருந்ததோடு, அவர்கள் தன்னை காதலிப்பதாகவும் கூறினார்கள். அதில் ஒருவர் மூன்று பக்கத்திற்கு ரத்தத்தினால் கடிதம் எழுதி இருந்தார், என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடைபெற இருக்கிறது, தற்போதைய கொரோனா பிரச்சினையால் அதை ஒத்தி வைத்திருக்கிறேன், என்று கூறிய கிரேம், தான் எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் நடத்தி வந்த நிகழ்ச்சியை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.