பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளிய சன்னி லியோன்! - எதில் தெரியுமா?

பிரபல ஆபாச நடிகையான சன்னி லியோன், தற்போது பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். அவரது கவர்ச்சியால் ரசிகர்கள் மட்டும் இன்றி சில பாலிவுட் பிரபலங்களும் சொக்கிக் கிடப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பாலிவுட்டையும் கடந்து தென்ந்திய மொழி சினிமாக்களிலும் சன்னி நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், கூகுளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் சன்னி லியோன் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில், முன்பு ஒரு காலத்தில் முதலிடம் பெற்ற பிரதமர் மோடி, ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் உள்ளிட்ட அனைவரையும் பின்னுக்கு தள்ளியுள்ள சன்னி லியோன் கடந்த இரண்டு வருடங்களாக முதலிடத்தில் நீடிக்கிறார்.
அவர் குறித்து தேடும், போது அவரது வீடியோ மற்றும் அவரது வாழ்க்கை குறித்து அறிவதற்காகவே மக்கள் தேடியுள்ளதாக தெரிவித்திருக்கும் கூகுள், அசாம், மணிப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தான் சன்னி லியோன் பற்றி அறிய அதிகம் ஆர்வம் காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.