சஞ்சீவுடன் காதல்! - மனம் திறந்த ஆல்யா மானசா

சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான ஜோடிகளில் மக்களின் பேவரட் ஜோடியாக திகழ்வது ‘ராஜா ராணி’ சீரியலின் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடியாகும். இவர்கள் நிஜத்திலும் காதலித்து வருவதாக அவ்வபோது கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட கிசு கிசுக்களுக்கு இந்த ஜோடி எந்தவித மறுப்பும் இதுவரை தெரிவிக்காத நிலையில், சில நேரங்களில் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில், சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்ட மானசா, “வித் மை பேபி” என்று பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள், மீண்டும் இருவரும் காதலிப்பதாக, சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, அவர்களிடமே இது குறித்த் கேட்டு வந்தனர்.
உடனே அந்த பதிவை நீக்கிய ஆல்யா மானசா, “எங்கள் உறவை பற்றி தவறாக பேச வேண்டாம். யாரையும் குழப்ப விரும்பவில்லை.. இது ஒரு டேர் கேம். அதனால் தான் அப்படி பதிவிட்டேன்” என்று மனம் திறந்து விளக்கம் அளித்துள்ளார்.
ஏற்கனவே, தொலைக்காட்சி சீரியல்களில் ஜோடியாக நடித்தவர்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், ‘ராஜா ராணி’ சீரியல் ஜோடியான சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடியும், வாழ்க்கையிலும் ஜோடியாகைவிடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது நடக்குமா இல்லையா, என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.