Mar 11, 2019 06:07 PM

ஆரவ் - ஓவியா நடிப்பில் உருவாகும் ‘ராஜபீமா’ படப்பிடிப்பு முடிந்தது!

ஆரவ் - ஓவியா நடிப்பில் உருவாகும் ‘ராஜபீமா’ படப்பிடிப்பு முடிந்தது!

பிக் பாஸ் டைடில் வின்னர் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ராஜபீமா’. மனித, விலங்கு முரணை பேசும் படமாக உருவாகும் இப்படத்தில் ஹீரோயினாக ஆஷிமா நர்வால் நடிக்க, ஓவியா சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிப்பதோடு, ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டிருக்கிறார். எஸ்.மோகன் தயாரிக்கும் இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்குகிறார். 

 

பாலக்காடு, பொள்ளாச்சி, தாய்லாந்து என பல இடங்களுக்கு பயணித்து படப்பிடிப்பு செய்து மிகப்பெரிய சவால்களை சந்தித்த இப்படக்குழு தற்போது முழு படப்பிடிப்பையும் திருப்திகரமாக முடித்திருக்கிறார்கள்.

 

இது குறித்து இயக்குநர் நரேஷ் சம்பத் கூறுகையில், “ஆம் உண்மையிலேயே பல்வேறு இடங்களில், குறிப்பாக அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பை நடத்தியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. சில விஷயங்களை காகிதங்களில் கதையில் எழுதும்போது நன்றாக இருக்கும், ஆனால் படப்பிடிப்பில் எதிர்பாராத அனுபவங்களை சந்தித்தது, தாண்ட முடியாத பெரிய தடையாக இருந்தது. குறிப்பாக, யானையுடன் நடித்த நாயகன் ஆரவ்விற்கு இது கடினமாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கு முன்பே யானையுடன் நட்பாக இருந்த போதிலும், முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் இருந்தது. காடுகளில் வழுக்கும் பாறைகள் மற்றும் தரைகள் இன்னொரு தடங்கலாக இருந்தது. இருப்பினும், படப்பிடிப்பை சிறப்பாக முடித்து விட்டு வந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.” என்றார்.

 

Rajabheema

 

தயாரிப்பாளர் எஸ்.மோகன் கூறுகையில், “படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை உடனடியாக ஆரம்பித்து, செய்து கொண்டு இருக்கிறோம். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.” என்றார்.