Jan 29, 2018 05:50 AM

அரசியல்வாதியிடம் சிக்கி சின்னாபின்னமாகும் சுகன்யா!

அரசியல்வாதியிடம் சிக்கி சின்னாபின்னமாகும் சுகன்யா!

1991 ஆம் ஆண்டு வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சுகன்யா, தொடர்ந்து ‘சின்ன கவுண்டர்’, ‘திருமதி பழனிச்சாமி’, ‘வால்டர் வெற்றிவேல்’, ‘இந்தியன்’உள்ளிட்ட பல தமிழ்ப் படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

 

2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவில் செட்டிலான சுகன்யா, 2003 ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு சென்னை வந்துவிட்டார்.

 

விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க தொடங்கிய சுகன்யா, சினிமாவைக் காட்டிலும் சின்னத்திரையில் அதிகம் ஈடுபாடு காட்டி வருகிறார்.

 

இந்த நிலையில், அரசியல்வாதி ஒருவரிடம் அவர் சிக்கிக்கொண்டு சின்னாபின்னாமாகும் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

சுகன்யாவுக்கு, சென்னை பெசண்ட் நகரில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில் சில பிரபல கட்சியைச் சேர்ந்த ஒருவர் வாடகைக்கு வந்துள்ளார். ஒரு சில நாட்களுக்கு முன்பு அந்த வீட்டை, அவர் கட்சி அலுவலகமாக மாற்றிவிட்டாராம். இதற்கு சுகன்யா எதிர்ப்பு தெரிவித்தாலும், அவர் அதைக் கண்டுக்கொள்ளவில்லையாம்.

 

இதையடுத்து, போலீசில் புகார் சுகன்யா புகார் அளித்துள்ளார். இதன் பிறகு சுகன்யாவுக்கு சமாதான தூதுவிட்ட அந்த அரசியல்வாதி, தான் வீட்டை காலி செய்துவிடுகிறேன், ஆனால் இதுவரை பேலன்ஸ் உள்ள வாடகை தொகையை என்னிடம் கேட்க கூடாது, என்று கூறியுள்ளார்.

 

அரசியல்வாதியின் இந்த அடாவடியால் நடிகை சுகன்யா ரொம்பவே கஷ்ட்டத்தில் இருக்கிறாராம்.