Mar 25, 2019 10:44 AM

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு கல்யாணம்! - இந்த நடிகை தான் மணப்பெண்

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு கல்யாணம்! - இந்த நடிகை தான் மணப்பெண்

’அர்ஜூன் ரெட்டி’ என்ற தெலுங்குப் படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான விஜய் தேவரகொண்டா, தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவாக உயர்ந்திருப்பதோடு, தமிழ் சினிமாவிலும் முக்கியமான நடிகருக்கான இடத்தை பிடித்திருக்கிறார்.

 

இவர் தமிழியில் அறிமுகமான ‘நோட்டா’ எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், இவரை வைத்து படம் தயாரிக்க பல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள். அதனை தொடர்ந்து பெரிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் தமிழ் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, உடல் நிலை சரியில்லாத காரணத்தால் விஜய் தேவரகொண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்த நிலையில், விஜய் தேவரகொண்டாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அவர் வெளிநாட்டு பெண் ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவியதை தொடர்ந்து, தற்போது ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் நடித்த நிஷாரிகாவை விஜய் தேவரகொண்டா காதலிப்பதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஷாரிகா, தமிழில் ஒரு படத்தில் நடித்திருந்தாலும், தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.

 

Actress Niharika

 

ஆனால், விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தார் இந்த தகவலை மறுத்திருக்கிறார். விஜய்க்கு திருமணம் என்று வெளியாக தகவல்கள் எதிலும் உண்மை இல்லை, என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.