May 23, 2019 08:11 AM

”சூர்யா படத்தில் நடித்தது, நான் செய்த மிக பெரிய தவறு”! - புலம்பும் நடிகை

”சூர்யா படத்தில் நடித்தது, நான் செய்த மிக பெரிய தவறு”! - புலம்பும் நடிகை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, பல வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடிப்பதோடு, வித்தியாசமான வேடங்களிலும் நடித்து வருகிறார். இவரது ஆரம்ப காலக்கட்டத்தில் சில படங்கள் தோல்வியடைந்திருகின்றன. அதில் ஒரு படம் தான் ஸ்ரீ.

 

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீ’ படத்தில் ஹீரோயின்களாக ஸ்ருதிகா, காயத்ரி ஜெயராமன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

 

ஸ்ருதிகா திருமணம் செய்துக் கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்ட நிலையில், காயத்ரி ஜெயராம், தற்போது சீரியலில் பிஸியாகியுள்ளார். ‘நந்தினி’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் தற்போது ‘அழகு’ தொடரில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

 

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசிய காயத்ரி ஜெயராம், ”ஸ்ரீ படம் இயக்குநர் எனக்கு சொன்ன கதை வேறு, படமாக்கிய கதை வேறு. சொல்ல போனால் படத்தில் நான் முன்று, நான்கு காட்சிகளில் மட்டுமே வருவேன். என் சினிமா வாழ்விலேயே இந்த படத்தில் நடித்தது தான் நான் செய்த மிக பெரிய தவறு” என்று புலம்பியுள்ளார்.

 

Gayatri Jeyaraman