Apr 11, 2020 10:11 AM

100 ஏழை குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்!

100 ஏழை குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்!

நடிகர் அபி சரவணன் என்பதைவிட சமூக ஆர்வலர் அபி சரவணன், என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வரும் வகையில், பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் அபி சரவணன், தான் வசிக்கும் பகுதியில் உள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்திருக்கிறார்.

 

’அட்டக்கத்தி’, ‘குட்டிபுலி’ போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து, பிறகு ‘கேரளம் நாட்டிலம் பெண்களுடனே’ படத்தின் மூலக் ஹீரோவாக உயர்ந்த அபி சரவணன், ‘பட்டதாரி’, ‘மாயநதி’ என தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது ‘பிளஸ் ஆர் மைனஸ்’, ‘இறையான்’, ‘அந்த ஒரு நாள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் அபி சரவணன், சினிமாவில் என்னதான் பிஸியாக இருந்தாலும், சமூக பிரச்சினைகளிலும் தன்னை புகுத்திக் கொண்டு தன்னால் முடிந்தவரை சமூகத்திற்கு எதாவது செய்து வருகிறார். 

 

அந்த வகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று நினைத்தவர், மதுரையில் தான் வசிக்கும் பகுதி அருகே உள்ள 100 ஏழை குடும்பவங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளார்.

 

அபி சரவணனுடன் காருண்யா 5டி என்டர்டைன்மெண்ட் நிறுவனர் ஜெசியும் இணைந்து இந்த உதவியை செய்திருக்கிறார்.

 

Abi Saravanan

 

இது குறித்து அபி சரவணனிடம் கேட்டதற்கு, “கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப ஒரே வழி நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி வீட்டிலே இருக்கும் போது, தினக்கூலி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என்னால் பெரிய அளவில் செய்ய முடியவில்லை என்றாலும், என்னால் முடிந்த சிறிய உதவியாக இதை நான் செய்திருக்கிறேன். ” என்றார்.