பிரபல ஆபரண நிறுவனத்தின் விளம்பரத் தூதரான நடிகர் துல்கர் சல்மான்!
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
தென்னிந்தியாவின் மிகப் பிரபல நட்சத்திரம் துல்கர் சல்மானின் பிரபல்யத்தையும் ஆபரணத் துறையில் கைவினைத்திறன் மற்றும் புதுமையான உத்திகளையும், கலைநயத்தையும் கொண்ட ஜோஸ் ஆலுக்காஸ் பிராண்டையும் இந்த ஒத்துழைப்பு ஒன்றிணைக்கிறது. துல்கர் சல்மானின் கவர்ச்சியான தோற்றமும், சிறப்பான நடிப்பும் மொழிகள், தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களைக் கடந்து மக்களை ஈர்க்கிறது.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் வெளிவரும் திரைப்படங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, மக்களிடம் பிரபலம் பெற்றிருக்கும் இவர், பல ஆண்டுகளாக இந்திய சினிமாவில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். நவீன தென்னிந்திய கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கும் இவரது பண்புகள் நேர்த்தி, தனித்துவம் மற்றும் அமைதியான நம்பிக்கை ஆகியவற்றால் உருவானவை. சினிமாவைத் தாண்டி, ஆட்டோமொபைல் மற்றும் கலை சார்ந்த விஷயங்களில் இவருக்கு இருக்கும் ஆர்வம், கைவினைத்திறன், நுணுக்கமான கலை அம்சங்கள் மற்றும் நேர்த்தியான படைப்புகள் மீதான இவரது விருப்பத்தை காட்டுகிறது. இந்த மதிப்பீடுகள், ஜோஸ் ஆலுக்காஸ் இத்தனை ஆண்டுகளாக தனது முன்னேற்றப் பாதையை வடிவமைத்த செயல்முறையோடு ஒத்துப்போகின்றன.
இந்த பிராண்டின் விளம்பரத் தூதராக துல்கர் சல்மான், ஜோஸ் ஆலுக்காஸின் வரவிருக்கும் விளம்பரங்களில் இடம்பெறுவார். ஆபரணங்களை தனிப்பட்ட பாணி உணர்வு மற்றும் தொடர்ச்சியின் பிரதிபலிப்பாக சுவாரஸ்யமாக உருவாக்கப்படும் பல்வேறு விளம்பரங்களில் தனது இயல்பான நடிப்புத் திறனின் மூலம் இந்த பிராண்டின் செய்தியை மக்களிடம் எளிதாக கொண்டுபோய் சேர்ப்பார்கள்.
ஜோஸ் ஆலுக்காஸின் நிர்வாக இயக்குநர் வர்கீஸ் ஆலுக்காஸ் கூறுகையில், “எப்போதும் தரத்தை உயர்த்துவதிலும், நேர்மையான வழியில் மக்களின் நம்பிக்கையை பெறுவதிலும் தொடர்ந்து இருந்து வரும் எமது அர்ப்பணிப்பே எமது வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. 916 BIS ஹால்மார்க் தங்கத்தை, அது ஆபரணத் தொழில்துறையின் விதிமுறையாக மாறுவதற்கு முன்பே நாங்கள் அறிமுகப்படுத்தியது எமது அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. நடிகர் துல்கர் சல்மானின் வெற்றிகரமான பயணமும், கதாபாத்திரங்களை அவர் தேர்ந்தெடுக்கும் விதத்தில் இருக்கும் தெளிவு மற்றும் நுணுக்கங்களில் அவர் செலுத்தும் கவனமும், நாங்கள் பல ஆண்டுகளாக இந்த பிராண்டை கட்டமைத்த விதத்தோடு நேர்த்தியாக ஒத்துப்போகிறது,” என்றார்.

ஜோஸ் ஆலுக்காஸின் நிர்வாக இயக்குநர் பால் ஆலுக்காஸ் கூறுகையில், “நாங்கள் எமது இருப்பை விரிவுபடுத்தி, நாடெங்கிலும் பரந்துபட்ட, நவீன வாடிக்கையாளர்களிடம் எமது சேவைகளை கொண்டுபோய் சேர்க்கும் நேரத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் இந்த இணைப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களைப் போலவே, துல்கரும் வயது பிரிவுகள் மற்றும் பிராந்தியங்களைக் கடந்து அனைவருடனும் இயல்பான பிணைப்பை கொண்டிருக்கிறார். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு உண்மையாக இருக்கும் அதே வேளையில், இன்றைய காலத்திற்கேற்ப சிறப்பாகபொருந்துகின்ற ஆபரண பிராண்டாக இருப்பதற்கான எங்கள் திறனை துல்கரின் கூட்டாண்மை மேலும் வலுப்படுத்தும்,” என்றார்.
ஜோஸ் ஆலுக்காஸின் நிர்வாக இயக்குநர் ஜான் ஆலுக்காஸ் கூறுகையில், “திரையிலும் அதற்கு வெளியிலும் துல்கர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதத்தில் மென்மையும், அலாதியான நேர்த்தியும் பெறுகிறது. அவரின் ஆர்ப்பாட்டமில்லாத தன்னம்பிக்கையானது, வடிவமைப்பு, கைவினைத்திறன் மற்றும் உணர்வுகள் தங்களைப் பற்றி தாங்களே பேச அனுமதிக்கும் ஜோஸ் ஆலுக்காஸின் இன்றைய நோக்கத்தோடு நன்றாகப் பொருந்துகிறது,” என்றார்.
நடிகரும், ஜோஸ் ஆலக்காஸின் புதிய பிராண்டு விளம்பரத் தூதருமான துல்கர் சல்மான் கூறுகையில், “ஜோஸ் ஆலுக்காஸ், நான் சிறுவயதிலிருந்தே பார்த்து ரசித்த பெருமைமிக்க ஒரு பிராண்டாகும். குடும்ப நிகழ்வுகளின் தருணங்களிலும் ஒரு நபரின் தனிப்பட்ட சாதனைகளில் நகைகள் வகிக்கிற பங்கையும் ஜோஸ் ஆலுக்காஸ் நன்கு புரிந்து வைத்துள்ளது. பாரம்பரியத்தை மதிக்கும் அதே வேளையில், மாறிவரும் ரசனைகள் மற்றும் நவீன வாழ்க்கை முறைகளுக்கு ஏற்பத் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைவதுதான் இந்த பிராண்டுடனான இணைப்பை எனக்கு அர்த்தமுள்ளதாக ஆக்கியிருக்கிறது,” என்றார்.
உயர்ந்த நோக்கம் மற்றும் நீண்டகால உழைப்பு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட இரு பயணங்களை இந்த கூட்டாண்மை ஒன்றிணைக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக ஜோஸ் ஆலுக்காஸை வழிநடத்தி முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றிருக்கும் அணுகுமுறையை துல்கர் சல்மான் உடனான இந்த ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தும்.

