சாலை ஓரம் வசிப்பவர்களின் பசியை போக்கும் நடிகர் பஷீர்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளரும், அதிமுக பிரமுகருமான ஜே.எம்.பஷீர், சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தினமும் இரவில் உணவு வழங்கி வருகிறார்.
கொரோனா பாதிப்பு ஆரம்பிக்கட்ட உடன், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்கள், சினிமா பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பொருளாதார உதவி செய்து வரும் பஷீர், கடந்த மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் சாலைகளில் வாழும் ஆதரவற்ற மக்களின் பசியை போக்கும் விதத்தில், தினமும் இரவு நேரங்களில் சாலையில் வசிப்பவர்களுக்கு பஷீர் உணவு வழங்கி வருகிறார். சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று, சாலையில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்குவதை பஷீர் பல மாதங்களாக செய்து வந்த நிலையில், தற்போது அந்த செயல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
’குற்றாலம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருப்பதோடு, அப்படத்தை தயாரித்திருக்கும் பஷீர், அடுத்ததாக முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் முத்துராமலிங்க தேவராக நடிக்கிறார். ‘தேசிய தலைவர்’ என்று தலைப்பு வைக்கப்படுட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த உடன் தொடங்க உள்ளது.