Feb 03, 2018 06:37 AM

நடிகர் மன்சூர் அலிகானின் அண்ணன் மரணம்!

நடிகர் மன்சூர் அலிகானின் அண்ணன் மரணம்!

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். தமிழ் மட்டும் இன்றில் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ள இவர், தற்போது பல படங்களை தயாரித்து இயக்கி ஹீரோவாகவும் நடித்து வருவதோடு, காமெடி கலந்த வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், நடிகர் மன்சூரலிகானின் அண்ணன் இ.எஸ்.சாகுல் ஹமீது இன்று மரணம் அடைந்துவிட்டார். அவருக்கு வயது 69,

 

பொது மக்கள் அஞ்சலிக்காக, சென்னை விழுகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இ.எஸ்.சாகுல் ஹமீதின் உடல், இன்று இரவு ஆழ்வார் திருநகர் சாதிக் பாட்சா நகர் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.