Jan 30, 2018 05:37 AM

நடிகர் பார்த்திபன் மகளுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

நடிகர் பார்த்திபன் மகளுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

’புதிய பாதை’ படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் அறிமுகமான பார்த்திபன், தனக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

 

நடிப்பு மற்றும் இயக்கம் என்று இருந்த பார்த்திபன், நடிப்பதை தவிர்த்துவிட்டு இயக்கம் மட்டும் செய்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. அதே போல், பிற இயக்குநர்களின் படங்களில் வில்லனாகவும் பார்த்திபன் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

இந்த நிலையில், சமீபகாலமாக ரஜினிகாந்த், கமல், ஏ.ஆர்.ரஹ்மான் என்று சினிமாவின் முக்கிய தலைகளை பார்த்திபன் நேரில் சென்று சந்தித்து வருகிறார்.

 

பார்த்திபனின் இத்தகைய சந்திப்பு எதற்காக என்று தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அந்த ரகசியம் கசிந்துள்ளது. பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் முடிவு ஆகியுள்ளதாம். அதற்கான அழைப்பிதழ் கொடுக்கவே சினிமாவின் முக்கிய பிரமுகர்களை அவர் சந்தித்து வருகிறாராம்.

 

மணிரத்னம் இயக்கிய ‘கண்ணத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தனா, மணிரத்னத்திடமே உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது.