May 12, 2020 03:12 PM

பெண் தொழிலதிபரை திருமணம் செய்யும் ராணா!

பெண் தொழிலதிபரை திருமணம் செய்யும் ராணா!

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ராணா, ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்து இந்திய சினிமாவின் முக்கியமான நடிகராக உயர்ந்திருக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் ‘காடான்’ என்ற படத்தில் நடித்து வருவதோடு, மேலும் பல படங்களிலும் ராணா நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், ராணாவுக்கு விரைவில் திருமணம் ஆக உள்ளது. அவர் திருமணம் செய்துக் கொள்ளப் போகும் பெண் யார்? என்பதை அவரே இன்று அறிவித்துள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த மீகா பஜாஜ் என்ற தொழிலதிபரை ராணா திருமணம் செய்ய உள்ளார்.

 

இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் மீகா பஜாஜ் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் ராணா, “இவர் எனக்கு சம்மதம் தெரிவித்து விட்டார்” என்றும் பதிவிட்டுள்ளார்.

 

ராணா - மீகா பஜாஜ் திருமணம் கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு நடைபெறும் என்றும், இது தொடர்பான முழு விவரத்தை ராணா குடும்பத்தினர் விரைவில் அறிவிக்க இருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இதோ ராணாவின் வருங்கால மனைவியின் புகைப்படம்,