Jan 03, 2026 07:40 AM

ஜீ5-ன் புதிய இணையத் தொடர் ’ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’படப்பிடிப்பு துவங்கியது!

ஜீ5-ன் புதிய இணையத் தொடர் ’ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’படப்பிடிப்பு துவங்கியது!

ஜீ5 ஓடிடி நிறுவனத்தின் புதிய இணையத் தொடரான ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’ (Once Upon A Time in Kayamkulam) படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. 

 

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இத்தொடரை ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் ஹவுஸ் (Rise East Production House) நிறுவனம் தயாரிக்க, அமீன் பாரிஃப் இயக்குகிறார்.

 

முழுக்க மண் மணம் கமழும் ஹைஸ்ட் காமெடி (Heist Comedy) ஜானரில் உருவாகும் இந்த தொடர் நகைச்சுவை, பரபரப்பான  திருப்பங்கள் மற்றும் இன்றைய ஓடிடி ரசிகர்களை கவரும் நவீன கதை சொல்லல் ஆகியவை இணைந்து, தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.

 

இந்த தொடரில் அன்புசெல்வன், சுபாஸ், ரமேஷ் மாதவன், வின்சு ரேச்சல், ராகேஷ் உசார், கௌதமி நாயர், சாவித்ரி, விஜய் சத்தியா, அருண், விக்னேஸ்வர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

இந்த தொடரின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடர் பற்றிய பல தகவல்களை ஜீ5 நிறுவனம் விரைவில் அறிவிக்க உள்ளது.