Feb 16, 2021 09:21 AM

திருமண சிக்கலால் நடிகர் தற்கொலை! - வீடியோவால் பரபரப்பு

திருமண சிக்கலால் நடிகர் தற்கொலை! - வீடியோவால் பரபரப்பு

மன அழுத்தத்தில் பாதிக்கப்படும் சினிமா நடிகர்கள் பலர் மருத்துவ சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டு வந்தாலும், சிலர் தற்கொலை செய்துக் கொள்வது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், டோனியின் வாழ்க்கை படத்தில் சுஷாந்தின் நண்பர் வேடத்தில் நடித்திருந்த சந்தீப் நஹர், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Sandeep Nahar

 

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் சந்தீப் நஹர், தற்கொலைக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது இறுக்கமான மனநிலை குறித்து வீடியோ ஒன்றும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், தொழில்முறை மற்றும் செய்துள்ளார். பிரச்சினைகள், குறிப்பாக அவரது சிக்கலான திருமணம் பற்றி பேசியுள்ளார்.

 

அதே சமயம், தனது தற்கொலைக்கு தனது மனைவியை குறை சொல்ல கூடாது, என்றும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.