Mar 18, 2019 07:10 AM

ஓவியாவை அப்செட்டாக்கிய ‘90 ML' படத்தால் அடையாளம் பெற்ற வாரிசு நடிகர்!

ஓவியாவை அப்செட்டாக்கிய ‘90 ML' படத்தால் அடையாளம் பெற்ற வாரிசு நடிகர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஓவியாவுக்கு மீண்டும் பட வாய்ப்புகள் குவிய தொடங்கினாலும், அவர் கேட்ட சம்பளத்தால் அவரை அனுகிய பல தயாரிப்பாளர்கள் பின் வாங்குகிறார்கள். சிலர் மட்டும் அவர் கேட்ட தொகையை சம்பளமாக கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்கிறார்கள்.

 

அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓவியாவின் நடிப்பில் வெளியான முதல் படமாக ‘90 ML' என்ற படம் சமீபத்தில் வெளியானது. பெண் இயக்குநர் இயக்கிய இப்படம் பெண்களை தவறான வழிக்கு அழைத்து செல்லும் அநாகரிகமான படமாக இருக்கிறது, என்று பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஓவியா மீது போலீசில் புகார் அளித்ததோடு, வழக்குகளும் தொடர்ந்துள்ளனர்.

 

இதனால் ரொம்பவே அப்செட்டாகிப் போன ஓவியா, வெளியே தலைகாட்டாமல் வீட்டினுள் சில நாட்கள் முடங்கி இருந்ததாகவும் கூறப்பட்டது. இப்படி ஓவியாவை ரொம்பவே அப்செட்டாக்கிய ‘90ML' படம் வாரிசு நடிகர் ஒருவருக்கு அடையாளத்தை கொடுத்திருக்கிறது.

 

ஆம், 90 எம்.எல் படத்தில் ஓவியாவுடன் நடித்த நான்கு பெண்களில் ஒருவரான தாமரை என்ற வேடத்தில் நடித்தவரின் கணவராக, துடிதுடிப்பான ரவுடி வேடத்தில் நடித்திருந்தவர் தான் அந்த வாரிசு நடிகர். தேஜ்ராஜ் என்ற அவர் வேறு யாருமில்லை, பிரபல நடிகர் சரண்ராஜின் மகன்.

 

தனது அப்பா தமிழக மக்களுக்கு ரொம்பவே பரிச்சயமான பிரபல நடிகர் என்றாலும், அப்பாவின் அடையாளத்தை வெளிக்காட்டாத தேஜ்ராஜ், தனது நடிப்பின் மூலம் இன்று வெள்ளித்திரையில் தனி அடையாளத்தை பெற்றிருக்கிறார்.

 

Saranraj and Tejraj

 

90 எம்.எல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட அதில் நடித்த தேஜ்ராஜையும், அவரது நடிப்பையும் பாராட்டியதோடு, யார் அந்த நடிகர்? என்று கேட்கவும் செய்தார்கள்.

 

சின்ன வயதில் இருந்து திரைப்படங்களைப் பார்த்து சினிமா ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட தேஜ்ராஜ், எஸ்.ஆர்.எம் கல்லூரியில் விஸ்காம் பட்டம் பெற்றதோடு, ரகுராம் மாஸ்டர் மற்றும் ஸ்ரீதர் மாஸ்டரிடம் நடனத்தை முறைப்படி கற்றுக்கொண்டிருக்கிறார். அப்படியே பாண்டியன் மாஸ்டரிடம் சண்டைப் பயிற்சியை மேற்கொண்டவர், கூத்துப்பட்டறை, பாலுமகேந்திரா இன்ஸ்டிட்யூட் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நடிப்பு பள்ளி ஆகியவற்றில் நடிப்பையும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

 

இப்படி சினிமாவுக்கு தேவையான பல விஷயங்களை முறையாக கற்றுக் கொண்ட தேஜ்ராஜ், அவற்றை வைத்து தானாக வாய்ப்பு தேடும்போது தான், 9 எம்.எல் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவருக்கு அப்படம் நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது. தேஜ்ராஜை பார்க்கும் பலர் அவரை அடையாளம் கண்டு அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவதும், கை கொடுப்பதும் என்று அவருக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்து வருகிறார்கள்.

 

முதல் படத்திலேயே இப்படி ஒரு அடையாளத்தை பெற்றிருக்கும் தேஜ்ராஜிடம் பலர் வில்லனாக நடிப்பீர்களா? என்று கேட்க, அவரோ, வில்லனா ஹீரோவாங்கிறது முக்கியமில்லை, பேர் வாங்கனும், அப்பா மாதிரி சினிமாவில் நிலைத்து நிற்கனும், அது தான் என் ஆசை, என்று பதில் கூறுகிறார்.

 

Actor Tejraj

 

தற்போது தேஜ்ராஜை தேடி வாய்ப்புகள் பல வந்தாலும், கதை தேர்விலும், கதாபாத்திர தேர்விலும் கவனம் செலுத்துபவர், விரைவிலேயே தான் நடிக்கும் புதுப்படங்களைப் பற்றிய விபரங்களை கூற உள்ளார்.