Jan 29, 2018 06:01 AM

நடிகை அமலா பால் திடீர் கைது!

நடிகை அமலா பால் திடீர் கைது!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அமலா பால் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அமலா பால், இயக்குநர் விஜயை திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றவர், தற்போது மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், சொகுசு கார் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கேரள போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், நேற்று திடீரென்று அவரை கைது செய்தனர்.

 

அமலா பாலை கைது செய்த போலீசார் அவரிடம் சில மணி நேரம் தீவிரமாக விசாரணை மேற்கொண்அ நிலையில், அவர் பெயிலில் நேற்றே வெளியே வந்துவிட்டார்.

 

கேரளாவில் சினிமா நடிகர்கள் பலர் சொகுசு கார் வாங்கியதில் முறைகேடு செய்து சிக்கியிருக்கும் நிலையில், நடிகை அமலா பாலை மட்டும் கைது செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.