Dec 27, 2020 09:52 AM

நயன்தாராவின் வளர்ச்சிக்கு உதவிய நடிகர்கள்! - நடிகை ஆண்ட்ரியாவின் சர்ச்சை பேச்சு

நயன்தாராவின் வளர்ச்சிக்கு உதவிய நடிகர்கள்! - நடிகை ஆண்ட்ரியாவின் சர்ச்சை பேச்சு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஆண்ட்ரியா. இவர் நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டதோடு, அவருடன் சில வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும், அதனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரே தெரிவித்திருந்தார்.

 

மேலும், தனது காதல் கஷ்ட்டக்கள் குறித்த கவிதை தொகுப்பு ஒன்றை வெளியிட்டவர், தன்னை காதலித்து கஷ்ட்டப்படுத்தியவர் யார்? என்பதை அறிவிக்க இருப்பதாகவும் கூறினார். ஆனால், அவர் எந்த ஒரு பெயரையும் வெளியிடவில்லை. அதற்கு மாறாக மவுனமாகிவிட்டார்.

 

தற்போது விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருப்பதோடு,’கா’ மற்றும் ‘பிசாசு 2’ ஆகியப் படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய போது நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நிகழ்ச்சியில் பேசிய ஆண்ட்ரியா, “திரையுலகில் நடிகைகள் முன்னணி கதாநாயகியாக வளர, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அப்போது தான் இவர் இந்த நடிகரின் படத்தில் நடித்துள்ள நடிகை என்று அடையாளம் காண முடிகிறது.

நடிகை நயன்தாராவின் வளர்ச்சிக்கு ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தேவைப்பட்டது. ஆனால் என்னுடைய வளர்ச்சிக்கு சிறந்த படங்களின் கதைகள் மட்டுமே தேவைப்பட்டது. அதே போல் ஒரு கதைக்கு தேவை என்றால் மட்டும் தான், நான் சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

ஆண்ட்ரியாவின் இந்த பேச்சு நயன்தாரா ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.