கொரோனா வைரஸ் பாதிப்பால் நடிகை மரணம்!

கொரொனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் நிலையில் இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
அதே சமயம், அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, அந்நாடுகளில் உள்ள பல சினிமா பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், பிரிட்டிஷ் நடிகை ஹிலாரி ஹேத் (Hilary Heath) கொரோனாவால் உயிரிழந்ததாக அவரது மகன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
76 வயதாகும் நடிகை ஹிலாரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு டேனியல் ஹேத், லாரா என ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள்.