May 07, 2019 01:54 AM

முஸ்லீம் மதத்திற்கு மாறிய நடிகை கஸ்தூரி! - புது பெயர் இது தான்

முஸ்லீம் மதத்திற்கு மாறிய நடிகை கஸ்தூரி! - புது பெயர் இது தான்

சமூக வலைதளங்கள் மூலம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நடிகை கஸ்தூரி, அவ்வபோது பொது நிகழ்ச்சிகளிலும் தனது பேச்சால் சர்ச்சைகளை ஏற்படுத்துகிறார். இதனால், கஸ்தூரி கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளை ஊடகத்துறையினர் மிஸ் பண்ணாமல் கவரேஜ் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

 

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பாக கஸ்தூரி இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரோ, என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட செய்தியை நாம் புகைப்படத்துடன் பார்த்தும்.

 

இதையடுத்து, கஸ்தூரி இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக வெளியான செய்திக்கு அவர் எந்தவித மறுப்பும் தெரிவிக்காத நிலையில், தற்போது தொழுகை நடத்தும் ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

 

இதனால், முஸ்லீம் மதத்திற்கு தான் மாறியதை கஸ்தூரி ஒப்புக்கொள்ளும் விதமாகவே இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், கஸ்தூரி தொழுகை நடத்தும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட, அதற்கு ரசிகர்கள் ஒருவர், ”உங்கள் இஸ்லாமிய பெயர் என்ன?” என கேட்க, அதற்கு கஸ்தூரி “தபஸ்ஸும்” என பதில் அளித்துள்ளார்.

 

Kasthuri in Islam

 

கஸ்தூரியின் இந்த திடீர் மாற்றம் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.