Jun 29, 2018 05:40 PM

நடிகையின் சுய இன்ப காட்சி - பாலிவுட் சினிமாவில் சர்ச்சை

நடிகையின் சுய இன்ப காட்சி - பாலிவுட் சினிமாவில் சர்ச்சை

சுய இன்ப காட்சிக்கு பஜனை பாடல் போன்று கருதப்படும் பாடலை பயன்படுத்தியது குறித்து இயக்குனர் கரண் ஜோஹார், நடிகை கியாரா அத்வானி ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். 

 

பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹார் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார். ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

 

இதற்கிடையே, இந்த குறும்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் கியாரா அத்வானி, சுய இன்பம் அனுபவிக்கும் காட்சி ஒன்று இடம்பெறுகிறது. அந்த காட்சியின் பின்னணியில், “கபி குஷி கபி கம்” பாடலை பயன்படுத்தியது சர்ச்சையாகியுள்ளது. சுயஇன்ப காட்சிக்கு பஜனை போன்று மதிக்கப்படும் பாடலை பயன்படுத்துவதா என்று அந்த பாடலை பாடிய லதா மங்கேஷ்கரின் குடும்பத்தார் கேள்வி எழுப்பியதோடு, இயக்குநர் கரண் ஜோஹாருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்திருக்கும் நடிகை கியாரா அத்வானி, “பெண்கள் சுய இன்பம் அனுபவிப்பது குறித்து பேசுவதை பாவம் என்று நினைத்த மக்கள் தற்போது சாதாரணமாக பேசுகிறார்கள். இந்த காட்சிக்கு போய் இவ்வளவு பெரிய சர்ச்சை எதற்கு என்று இனி வரும் காலங்களில் மக்கள் நினைப்பார்கள். ஒரு காலத்தில் முத்தக் காட்சிகள் பெரிய குற்றமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று முத்தக் காட்சிகள் எல்லாம் சாதாரணமாகிவிட்டது.” என்று கூறியிருக்கிறார்.

 

இருந்தாலும், இந்த விவகாரம் பாலிவுட் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதோடு, அங்கு பெரிய விவாதத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது.