Mar 25, 2019 10:30 AM

உயிருக்கு போராடும் அண்ணன்! - சோகத்தில் நடிகை குஷ்பு

உயிருக்கு போராடும் அண்ணன்! - சோகத்தில் நடிகை குஷ்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு தற்போதும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதோடு, டிவி தொடர்களிலும் நடித்து வருபவர், சீரியல் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

மேலும், தீவிர அரசியலில் ஈடுபட்டிருப்பவர், அகில இந்திய காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் பதவியையும் வகித்து வருகிறார்.

 

அரசியல், திரைப்பட தயாரிப்பு, நடிப்பு என்று பல துறைகளில் பிஸியாக இருக்கும் குஷ்புவும், அவரது குடும்பத்தாரும் பெரும் கவலையில் இருக்கிறார்கள்.

 

நடிகை குஷ்புவின் மூத்த சகோதரர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாராம். இது பற்றிய தகவலை குஷ்பு அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இந்த தகவலை பார்த்து அதிர்ச்சியான பலரும் நடிகை குஷ்புவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.