ரகசிய திருமணம் செய்துக் கொண்ட நடிகை மேக்னா நாயுடு!

’சரவணா’, ‘வைத்தீஸ்வரன்’, ‘ஜாம்பவான்’, ‘வீராசாமி’, ‘வாடா’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்த மேக்னா நாயுடு, தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். பட வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுகிறார்.
இந்த நிலையில், மேக்னா நாயுடு வெளிநாட்டு நபர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார். தற்போது அவரது திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேக்னா நாயுடு திருமணம் செய்துக் கொண்டவர் பெயர் லூயிஸ். போர்ச்சுகீசிய நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரரான லூயிஸுக்கு மேக்னாவை விட பத்து வயது அதிகமாம்.
தனது தந்தை மூலம் அறிமுகமான லூயிஸின் நட்பை சமூக வலைத்தளம் மூலம் தொடர்ந்த மேக்னா நாயுடு, ஒரு கட்டத்தில் அவர் மீது காதல் கொண்டுள்ளார். பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி மும்பையில், லூயிஸை மேக்னா ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டாராம். இந்து முறைப்படி நடந்த திருமணம், மிக மிக எளிமையாக நடந்ததாம். மேலும், அடுத்த வருடம் கிறிஸ்தவ முறைப்படி மேக்னா நாயுடுவும், லூயிஸும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்களாம்.
தற்போது, லூயிஸுடன் தேனிலவை தொடர்ந்துக் கொண்டிருக்கும் மேக்னா நாயுடு, தனது ரகசிய திருமணம் பற்றி, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.