நடிகை நக்மாவுக்கு தமிழகத்தில் நடந்த சோகம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நக்மா, தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அகிய இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பதவி விகித்து வரும் இவர், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸின் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நடிகை நக்மா திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். இந்த சோகமான சம்பவத்தால் அவர் ரொம்பவே அப்செட்டாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் சமீபகாலமாக நடந்து வந்த சில கோஷ்ட்டி மோதல்களை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து நக்மா மீது மேலிடத்திற்கு சென்ற புகார்களின் அடிப்படையில் தான் அவரது தமிழக பதவி பறிக்கப்பட்டுள்ளதாம்.
2015 ஆம் ஆண்டில் இருந்து இந்த பொறுப்பில் இருந்த நக்மா, நீக்கப்பட்டதை தொடர்ந்து, கேரளாவை சேர்ந்த பாத்திமா ரோஸ்னா என்பவரை தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக காங்கிரஸ் தலைமை நியமனம் செய்துள்ளது.
அதே சமயம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நக்மா நீடிப்பார் என்றும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.