பிரபல காமெடி நடிகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை பிரகதி!

பாக்யராஜ் இயக்கி நடித்த ‘வீட்ல விஷேசங்க’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரகதி. அப்படத்தை தொடர்ந்து விஜயகாந்தின் ‘பெரிய மருது’, ‘வாழ்க ஜனநாயகம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்தார்.
தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பிரகதி, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல காமெடி நடிகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை பிரகதி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கூறிய பிரகதி, முன்னணி காமெடி நடிகராக இருக்கும் அவர், தன்னுடன் நடிக்கும் போது, தன்னிடம் தவறாக அனுகியதோடு, ஆபாசமாகவும் பேசினார். அவரது அனுகுமுறை எல்லையை மீறியது. உடனே அவரை கேரோ வேனுக்கு அழைத்த நான், உங்களிடம் நான் எந்த விதத்திலும் தவறாக நடக்க வில்லை, அப்படி இருக்க என்னிடம் நீங்கள் ஏன் தவறாக நடக்கிறீர்கள். அங்கேயே உங்களை திட்டியிருப்பேன், ஆனால் உங்கள் மரியாதைக்கு கலங்கம் ஏற்படும் என்று தான், தனியாக அழைத்து கூறுகிறேன், என்று தெரிவித்தேன். பிறகு அந்த நடிகர் என்னிடம் தவறாக நடக்கவில்லை, என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிரகதி கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போது பல வகைகளில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதே சமயம், அந்த காமெடி நடிகர் யார்? என்பதை அவர் கூறவில்லை.