Jul 05, 2018 06:30 PM

காதலனை கழட்டிவிட்ட பிரியா பவானி சங்கர்!

காதலனை கழட்டிவிட்ட பிரியா பவானி சங்கர்!

டிவி செய்தி வாசிப்பளராக தனது ஊடக பணியை தொடங்கிய பிரியா பவானி சங்கர், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொலைக்காட்சி மூலம் பிரபலமானார். இதையடுத்து ஏராளமான ரசிகர்களை கொண்ட சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர், திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போடப்போவதாக அறிவித்தார்.

 

நடிப்பதை நிறுத்திவிட்டு தனது காதலரை திருமணம் செய்துக்கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகப்போவதாக அறிவித்தார். இவரது இந்த அறிவிப்பால் அதிர்ச்சியான இவரது ரசிகர்கள், தொடர்ந்து நடிக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தனர்.

 

இதற்கிடையே, ‘மேயாத மான்’ படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், முதல் திரைப்படத்திலேயே பலரது பாராட்டை பெற்றார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

தற்போது கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்திருப்பவர், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படி பல பட வாய்ப்புகள் தனக்கு வருவதால் பிரியா பவானி சங்கர் திக்குமுக்காடி போயிருக்கிறாராம்.

 

இந்த நிலையில், தனக்கு வரும் சினிமா வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொணடு கோடம்பாக்கத்தில் ஹீரோயினாக ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பவர், தனது ஆஸ்திரேலிய காதலரை கழட்டி விட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.