Jun 07, 2018 03:33 PM
ராதிகாவுக்கு குவியும் வாழ்த்துகள் - ஏன் தெரியுமா?

80 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்த நடிகை ராதிகா, தற்போதும் தமிழ் சினிமாவிலும், சின்னத்திரையிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.
குணச்சித்திர வேடங்களில் நடிப்பதில் வல்லவர் என்று பெயர் எடுத்திருக்கும் ராதிகாவுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதற்கு காரணம் அவரது மகள் ராடான் தான்.
ராதிகாவின் மகள் ராடானுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். இதன் மூலம் பாட்டியாகியிருக்கும் ராதிகாவுக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நடிகை ராதிகா, தனது சந்தோஷத்தையும் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.