Mar 19, 2019 07:31 AM

34 வருடங்களுக்கு பிறகு ராதிகாவுக்கு கிடைத்த வாய்ப்பு!

34 வருடங்களுக்கு பிறகு ராதிகாவுக்கு கிடைத்த வாய்ப்பு!

80 களில் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ராதிகா. தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் பிஸியாக இருப்பவர், சீரியல் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

இதற்கிடையே, கடந்த 1993 ஆம் ஆண்டு ‘அர்த்தனா’ என்ற மலையாளப் படத்தில் நடித்த ராதிகா, 25 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ராம்லீலா’ என்ற மலையாளப் படத்தில் நடித்தார். இப்படத்தை தொடர்ந்து, பல மலையாள பட வாய்ப்புகள் ராதிகாவுக்கு வருகிறதாம். அதன்படி, ராதிகா நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான ‘தி கேம்பினோஸ்’ மலையாளப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறதாம்.

 

இந்த நிலையில், மோகன்லால் நடிக்கும் ‘இட்னிமானி மேட் இன் சைனா’ என்ற படத்திலும் ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். இதன் மூலம் கடந்த 34 வருடங்களுக்கு பிறகு ராதிகா மோகன்லாலுடன் சேர்ந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.