Mar 18, 2019 07:48 AM

ஆந்திர தேர்தலில் மீண்டும் அதிரடி காட்டும் ரோஜா!

ஆந்திர தேர்தலில் மீண்டும் அதிரடி காட்டும் ரோஜா!

அரசியலில் ஈடுபட்டு வெற்றி பெற்ற பிரபல நடிகைகளில் ரோஜா முக்கியமானவராக இருக்கிறார். ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் அவரது, அரசியல் நடவடிக்கைகளும், பேச்சுகளும் ஆந்திராவில் பெரும் பரபரப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

 

வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுடன், 175 தொகுதிகளை கொண்ட ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் நடத்தப்பட இருக்கிறது. இதில், ஆட்சியை பிடிக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தீவிரம் காட்ட, ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில், தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தீவிரம் காட்டி வருகிறார்.

 

இந்த நிலையில், 175 இடங்களுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா மாவட்டம் இடுபுலபயாவில் நேற்று வெளியிட்டார்.

 

இதில், நகரி தொகுதி எம்.எல்.ஏ-வாக உள்ள நடிகை ரோஜாவுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சில தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து போராடி நகரி தொகுதியில் வெற்றிப் பெற்ற ரோஜா, இந்த தேர்தலில் முன்பைவிட அதிரடி காட்டுவார், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.