Jul 09, 2018 09:18 AM

அதிகாரிகளை மிரள வைத்த சதாவின் கவர்ச்சி!

அதிகாரிகளை மிரள வைத்த சதாவின் கவர்ச்சி!

‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான சதா, ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘அந்நியன்’ படத்தின் மூலம் பிரபல நாயகினார். அதன் பிறகு அவர் நடித்த ஒரு சில படங்கள் தோல்விப் படங்களாக அமைந்ததால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனது.

 

இதனால் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க தொடங்கிய சதா, தமிழில் மீண்டும் எண்ட்ரியாகி வடிவேலுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படமும் தோல்விப் படமாக அமைய, தமிழ் சினிமா அவரை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டது.

 

இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு டார்ச்லைட் என்ற தமிழ்ப் படத்தில் சதா நடித்திருக்கிறார். விஜயை வைத்து ‘தமிழன்’ படத்தை இயக்கிய மஜீத் இயக்கியிருக்கும் இப்படம் விபச்சார தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களை பற்றிய படமாகும்.

 

இப்படம் முழுவதும் முடிவடைந்து ரிலிஸூக்கு தயாராக உள்ள நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் சான்றிதழ் தர மறுத்துவிட்டார்களாம். படத்தில் ஆபாசக் காட்சிகள் அதிகமாக இருப்பதாக கூறி, சான்றிதழ் தர மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

 

பிறகு டெல்லியில் மேல் முறையீட்டு செய்து இந்த படத்திற்கு படக்குழு தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.