நடுரோட்டில் ஸ்ரேயா செய்த காரியம்! - வைரலாகும் வீடியோ

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ஸ்ரேயா, பட வாய்ப்புகள் குறைந்ததால் ரஷ்யா நாட்டை சேர்ந்த தனது காதலர் ஆண்ட்ரேய் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சில பட வாய்ப்புகள் கிடைத்ததால், ரஷ்யா டூ இந்தியா, இந்தியா டூ ரஷ்யா என்று பறந்துக் கொண்டிருந்த ஸ்ரேயா, தற்போது கொரோனா ஊரடங்கினால் ரஷ்யாவில் இருக்கிறார்.
தனது கணவருடன் ரஷ்யாவில் வாழும் ஸ்ரேயா, அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் நிலையில், சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதாவது, சுமார் ஒன்றரை லட்சத்திற்கு மேலானவர்கள் கொரோனாவில்னால் பாதிக்கப்பட்டிருக்கும் ரஷ்யா நாட்டில், முக கவசம் உள்ளிட்ட எந்த ஒரு பாதுகாப்பு அம்சமும் இல்லாமல், நடு ரோட்டில் தனது கணவருடன் ஸ்ரேயா நடனம் ஆடுகிறார். மேலும், தனது கணவருடன் நெருக்கமாக தெருக்களில் நடந்தபடியே, இந்தியாவில் உள்ள தனது பேவரைட்டான ரெஸ்ட்டாரண்டுகளை மிஸ் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரேயாவின் நடுரோட்டு நடன வீடியோ இதோ,