Apr 16, 2019 07:25 AM

சோகத்தில் நடிகை தமன்னா!

சோகத்தில் நடிகை தமன்னா!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் தமன்னாவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில், வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர், பேய் படம் ஒன்றில் சோலோ ஹீரோவாக நடிக்கிறார்.

 

இந்த நிலையில், நடிகை தமன்னாவை தீ விபத்து ஒன்று பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பழமையான கிறிஸ்த்தவ தேவலாயமான Notre Dame சர்ச் நேற்று இரவு தீப்பிடித்து எரிந்த நாசமானது. பயங்கரமான தீ விபத்து ஏற்பட்ட போதிலும், தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தை முழுவதுமாக அழியவிடாமல் ஓரளவு காப்பாற்றிவிட்டார்கள்.

 

உலகம் முழுவதும் கிரிஸ்தவர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த சம்பவம் குறித்து தங்களது வருத்தத்தை தெரிவித்திருக்கும் நிலையில், நடிகை தமன்னா, இந்த சம்பவம் குறித்து தனது சோகத்தை ட்வீட்டர் பதிவாக வெளியிட்டுள்ளார்.

 

இது குறித்து தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு அமைதிக்கான இடமாக திகழ்ந்த Notre Dame தீயில் எரிந்தது சோகமாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.