May 13, 2020 07:39 AM

காதலர் பற்றி மனம் திறந்த நடிகை டாப்ஸி!

காதலர் பற்றி மனம் திறந்த நடிகை டாப்ஸி!

கொரோனா ஊரடங்கினால் நடிகர், நடிகைகள் தங்களது குடும்பத்தினருடன் அதிகம் நேரம் செலவிடுகிறார்கள். மேலும், தங்களைப் பற்றிய ரகசியங்கள் மற்றும் வதந்திகள் என்று மறுக்கப்பட்ட தகவல்கள் பற்றியும் ரசிகர்களிடம் மனம் திறந்து பேசுகிறார்கள்.

 

அந்த வகையில், பிரபல தெலுங்கு நடிகர் ராணா, தனது வருங்கால மனைவி யார்? என்பதை நேற்று தனது சமூக வலைதளப் பக்கம் மூலம் தெரியப்படுத்தினார்.

 

இந்த நிலையில், நடிகை டாப்ஸியும் தனது காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதலை ஒப்புக் கொண்டிருக்கும் டாப்ஸி, வெளிநாட்டு பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் உடன் தனக்கு காதல் இருப்பது உண்மை தான் என்று தெரிவித்திருப்பவர், அதே சமயம், தனது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தால் தான், தனது உறவு அடுத்தக் கட்டத்திற்கு போகும், என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tapsee and Mathiyas

 

பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ், நடிகை டாப்ஸியின் சகோதரரின் நண்பராம். அவர் மூலம் தான் டாப்ஸிக்கு மத்தியாஸ் அறிமுகமாகி இருவரும் நட்பாக பழகி, தற்போது காதலர்களாகியிருக்கிறார்களாம்.