Mar 11, 2019 06:37 PM

ஒரு லட்சம் கொடுத்துவிட்டு பாலியல் தொல்லை! - நடிகர் மீது நடிகை விஜயலட்சுமி புகார்

ஒரு லட்சம் கொடுத்துவிட்டு பாலியல் தொல்லை! - நடிகர் மீது நடிகை விஜயலட்சுமி புகார்

சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த விஜயலட்சுமி, தனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு பாலியல் தொல்லை கொடுப்பதாக நடிகர் மீது பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.

 

விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் விஜயலட்சுமி. தற்போது தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வரும் விஜயலட்சுமி, உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சிகிச்சை பெற பணம் இல்லாமல் திரையுலகினரிடம் உதவி கேட்டார்.

 

இதை தொடர்ந்து கன்னட நடிகர் ரவி பிரகாஷ் நடிகை விஜயலட்சுமிக்கு ரூ.1 லட்சம் கொடுத்து உதவி செய்திருக்கிறார். இதையடுத்து, அவர் தினமும் மருத்துவமனைக்கு சென்று விஜயலட்சுமியை பார்ப்பதோடு, அவருக்கு மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை கொடுப்பதாக, விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

 

மேலும், ரவி பிரகாஷின் தொல்லையை தாங்க முடியாமல் விஜயலட்சுமி வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

ஆனால், விஜயலட்சுமியின் புகாரை மறுக்கும் நடிகர் ரவி பிரகாஷ், விஜயலட்சுமி எதற்காக போலீசாரை அழைத்தார் என்று தெரியவில்லை. நான் சனிக்கிழமை போலீஸ் அதிகாரி ஒருவரை சந்தித்து நடந்தது குறித்து விளக்கம் அளித்தேன். நான் விஜயலட்சுமியிடம் பேசவே இல்லை என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. என் செல்போனை பார்த்தாலே தெரிந்துவிடும், என்று தெரிவித்திருக்கிறார்.

 

Ravi Prakash