2 வருட போராட்டத்திற்குப் பிறகு புதுப்படத்தில் கமிட் ஆன அதிதி பாலன்!

‘அருவி’ படம் மூலம் யாரும் நடிக்க முடியாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் அதிதி பாலன். அப்படத்தில் நடித்தது மட்டு இன்றி அப்படத்திற்காக அவர், தன்னை தயார்ப்படுத்திக் கொண்ட விதம் அனைவரையும் வியக்க வைத்தது.
‘அருவி’ படத்திற்குப் பிறகு அதிதி பாலானுக்கு சில பட வாய்ப்புகள் வந்தாலும், அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதே சமயம், அவர் எதிர்ப்பார்த்த கதையும் அவருக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ‘அருவி’ படம் வெளியாகி சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு அதிதி பாலான், புதுப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளப் படமான இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ள அதிதி பாலன், இது பற்றிய தகவலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டதோடு, இரண்டு வருடமாக பல ஏற்றங்களையும், இறக்கங்களையும் சந்தித்து வந்திருக்கிறேன். தற்போது கிடைத்திருக்கும் பட வாய்ப்பு மூலம், என் வாழ்க்கையில் அனைத்தும் நல்லதாக நடக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன், என்றும் தெரிவித்துள்ளார்.