மோதலுக்கு தயாராகும் விஜய் - அஜித் ரசிகர்கள்!

விஜய் மற்றும் அஜித் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் பரம எதிரிகளாகவே இருக்கிறார்கள். விஜய் படம் வெளியானால் அஜித் ரசிகர்கள் கலாய்ப்பதும், அஜித் படம் ரிலிஸின்போது விஜய் ரசிகர்கள் கலாய்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
விஜய், அஜிதி படம் தனி தனியாக வெளியானாலே அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ள, இருவரது படமும் ஒரே நாளில் வெளியானால் நிலமை எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். ஆனால், அது நிஜமாகவே நடக்கப் போகிறது. ஆம், அஜித்தின் ’விசுவாசம்’ விஜயின் 62 வது படமும் தீபாவளியன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தெரிந்துக்கொண்ட விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சமூகவ் வலைதளங்களில் வார்த்தை போரை தொடங்கியுள்ளனர். மேலும், ”படம் வெளியாகும் போது பார்ப்போம்” என்றும் சில ரசிகர்கள் பதிவுட்டு மோதலுக்கு தயாராகி வருவதை காட்டுகிறார்கள்.
தொடர்ந்து நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் அஜித் இணைந்திருக்கும் ‘விசுவாசம்’ படத்தை விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி தியாகராஜன் தயாரித்து வருகிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 62 வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மெர்சல் மூலம் விஜய் மாபெரும் வெற்றி கொடுத்திருப்பதால், அவரது 62 வது படம் தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவேகம் படத்தில் ஏற்பட்ட நஷ்ட்டத்தை ஈடுக்கட்டுவதற்காகவே அஜித் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்கிறாராம். அதனால், அப்படத்தின் கதை உள்ளிட்ட எந்த விஷயத்திலும் பெரிய அளவில் ஈடுபாடு காட்டாத அஜித், இப்படம் முடிந்து அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் மீது தான் ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்படுகிறது.