Mar 17, 2019 07:11 AM

ரசிகர்களுக்காக அஜித் எடுத்த ரிஸ்க்!

ரசிகர்களுக்காக அஜித் எடுத்த ரிஸ்க்!

அஜித்தின் 59 வது படமாக உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். அஜித் மற்றும் வித்யா பாலன் பங்குபெறும் காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது.

 

‘பிங்க்’ இந்தி படத்தின் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் இயக்குநர் எச்.வினோத் பல மாற்றங்களை செய்திருக்கிறாராம். குறிப்பாக இந்தி பிங்க் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை என்றாலும், அஜித் ரசிகர்களுக்காக நேர்கொண்ட பார்வையில் பல ஆக்‌ஷன் காட்சிகளை வினோத் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகளில் அஜித், எந்தவித டூப்பும் இல்லாமல் ரிக்ஸ் எடுத்து நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சமீபத்தில் மழையில் பயங்கரமான ஆக்‌ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம், இதில் அஜித் உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்து நடித்தாராம். எதற்காக இப்படி ஒரு ரிஸ்க், என்று படக்குழுவினர் அவரிடம் கேட்டதற்கு, ”எல்லாம் ரசிகர்களுக்காக தான்” என்று கூறினாராம்.