பாட்ஷா ரீமேக்கில் அஜித்!

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ‘பாட்ஷா’ மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தான் தயாராக இருப்பதாக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறி வந்தாலும், ரஜினிகாந்த் அதற்கு செவிக்கொடுக்கவில்லை.
இதற்கிடையே, பாட்ஷா படத்தை ரீமேக் செய்தால் அதில் அஜித் தான் நடிக்க வேண்டும் என்றும், அவர் தான் அதற்கு பொருத்தமாக இருப்பார் என்றும், பிரபல காமெடி நடிகர் கருணாகரன் கூறியுள்ளார்.
அஜித்தின் விவேகம் படத்தில் காமெடி வேடத்தில் நடித்துள்ள கருணாகரன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாட்ஷா படத்தை ரீமேக் செய்ய வேண்டுமென்றால் அஜித் சார் தான் சரியான சாய்ஸ். ஏனென்றால் அவர் தான் கேங்ஸ்டர் படங்களுக்கு சரியான ஹீரோ, என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ‘பில்லா’ ரீமேக் அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தாலும், ‘பில்லா 2’ என்ற பிளாப் படத்தையும் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.