Jan 30, 2018 06:05 AM

அஜித்தின் ‘விசுவாசம்’ படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு!

அஜித்தின் ‘விசுவாசம்’ படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு!

விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ஒரு படம் முடிந்ததும், தங்களது அடுத்தப் படத்தை உடனடியாக தொடங்கிவிடுகிறார்கள். ஆனால், அஜித் மட்டும் தனது ஒரு படம் முடிந்த பிறகு அடுத்த படத்தை தொடங்குவதிலும், அந்த படத்திற்கு தலைப்பு வைப்பதிலும் தாமதப்படுத்தி வருகிறர்.

 

இதற்கிடையே, ‘விவேகம்’ படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் குறித்து சில குழப்பங்கள் இருந்து வந்த நிலையில், அதனை தெளிவுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டின் இறுதியில் அஜித்தின் அடுத்தப் படத்தின் தலைப்பு ‘விசுவாசம்’ என்றும், இயக்குநர் சிவா என்றும் அறிவித்ததோடு, அப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டாலும், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதில் இழுபறி இருந்து வந்தது.

 

இந்த நிலையில், அஜித்தின் ‘விசுவாசம்’ பட படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 5 மாதங்கள் நடைபெறவுள்ளது. படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

 

அஜித் இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கும் இப்படத்திற்கான ஹீரோயின்  மற்றும் பிற நடிகர்கள் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.