Nov 09, 2019 01:19 PM

சோகத்தில் அமலா பால்! - காரணம் பிரபல இயக்குநராம்

சோகத்தில் அமலா பால்! - காரணம் பிரபல இயக்குநராம்

வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு தான் சந்தோஷப்படுவதோடு, ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தி வந்த அமலா பால், தற்போது சோகத்தில் இருக்கிறாராம். காரணம் பிரபல இயக்குநராம்.

 

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிய அமலா பாலை ‘ஆடை’ படம் ஏமாற்றிய நிலையில், தற்போது ‘அதோ அந்த பறவைப் போல’ என்ற ஒரு படம் மட்டும் தான் அவர் கையில் இருக்கிறது. பாலிவுட் பக்கம் போகலாம், என்ற அவரது கனவும் கனவாகவே இருக்க, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஒப்பந்தமானார்.

 

வரும் டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்க உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோர் கலந்துக்கொள்ள இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அமலா பால் படத்தில் இருப்பது குறித்து படக்குழு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அட, அமலா பாலிடமே இது குறித்து எதுவும் சொல்லவில்லையாம்.

 

சில நாட்களுக்கு முன்பு அமலா பாலுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்த மணிரத்னம், அதன் பிறகு அவர் படத்தில் இருக்கிறாரா, இல்லையா, என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லையாம்.

 

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதை அறிந்த அமலா பால், தான் படத்தில் இருக்கிறேனா, என்பதை அறிந்துக் கொள்ள, மணிரத்னம் நிறுவனத்தின் புரொடக்‌ஷன்ஸ் மேனேஜர்களை தொடர்பு கொண்ட போது, மேக்கப் டெஸ்ட்டில் பெயிலாகிவிட்டதால் தன்னை மணிரத்னம் நிராகரித்த விஷயம் தெரிய வந்ததாம்.

 

Director Manirathnam

 

படத்தில் நடிக்க வைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை, தான் நிராகரிக்கப்பட்டதையாவது முறையாக தெரிவித்திருக்கலாமே, எதுவும் சொல்லாமல் இப்படி அமைதியாக இருப்பதா? என்று கேள்வி எழுப்பிய அமலா பால், ஏதோ புது நடிகைப் போல தனக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துவிட்டு, இப்போது நிராகரித்துவிட்டார்களே, என்று தனது தோழிகளிடம் சொல்லி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.