Feb 16, 2021 08:10 AM

அப்பா-மகள் அன்பை மையப்படுத்திய த்ரில்லர் படம் ‘அன்பிற்கினியாள்’

அப்பா-மகள் அன்பை மையப்படுத்திய த்ரில்லர் படம் ‘அன்பிற்கினியாள்’

அப்பா - மகள் உறவைவும், அன்பையும் மையப்படுத்திய திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பல வந்திருந்தாலும், த்ரில்லர் ஜானர் படம் என்பது மிகவும் அரிதான ஒன்று தான். அந்த வகையில், அப்பா - மகள் அன்பை மையப்படுத்திய த்ரில்லர் படமாக உருவாகிறது ‘அன்பிற்கினியாள்’.

 

’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கும் கோகுல் எழுதி இயக்கும் இப்படத்தில் அப்பாவாக அருண் பாண்டியனும், மகளாக அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கீர்த்தி பாண்டியனின் நடிப்பு கண்டிப்பாகப் பேசப்படும், என்று கூறும் இயக்குநர் கோகுல், சில முக்கிய காட்சிகளில் தனது உடல் அசைவுகள் மற்றும் கண்கள் மூலமாகவே அவர் பேசியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், ப்ரீஸர் அரங்குகளில் கடும் குளிரில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். அப்போது -11 டிகிரி, -12 டிகிரி குளிரிலும் அசராது நடித்துப் படக்குழுவினரை கீர்த்தி ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். நீண்ட வருடங்கள் கழித்து நடிப்பு உலகிற்கு திரும்பியுள்ள அருண் பாண்டியனின் நடிப்பு பார்வையாளர்களைப் பேசவைக்கும் என்கிறது படக்குழு.

 

Anbirkkiniyal

 

மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார். கோகுலுடன் சேர்ந்து ஜான் மகேந்திரன் வசனம் எழுதியிருக்கும் இப்படத்தின் கலையை ஜெய்சங்கர் நிர்மாணித்துள்ளார். பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். பிசி சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

 

பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல எமோஷனலான த்ரில்லர் விருந்தாக அமையும் விதத்தி உருவாகியுள்ள இப்படம் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.